தொடரும் ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா: பரபரப்பில் தமிழ்நாடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சுனில்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழக தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். இவர் முந்தைய ஆட்சிக்காலத்தில் சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவிகளை ராஜினாமா செய்வது தமிழக அரசு வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version