MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல் 2027: மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகம் – பிரசன்னா கணிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல் 2027: மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகம் – பிரசன்னா கணிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல் 2027: மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகம் – பிரசன்னா கணிப்பு

விளையாட்டு

ஐபிஎல் 2027: மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகம் – பிரசன்னா கணிப்பு

Sri Prem Kumar R
Last updated: நவம்பர் 12, 2026 6:23 காலை
Sri Prem Kumar R
Share
கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா ஐபிஎல் குறித்து பேசுகிறார்
ஐபிஎல் 2027 மினி ஏலம் குறித்து கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா
SHARE

ஐபிஎல் 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய சாதகமான சூழல் நிலவும் என்று கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டிரேட் மூலம், ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் அணிக்கு வழங்கிவிட்டு, அந்த அணியிடமிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங், சர்துல் தாக்கூர், தீபக்சாகர், மிட்செல் சாண்ட்னர், வில் ஜேக்ஸ், ரூதர்போர்ட், நமன் தீர் போன்ற வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழும்.

இது தொடர்பாக அஸ்வினுடன் நடைபெற்ற உரையாடலில் பேசிய கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா, மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்ஸ்தீப் சிங்கை வாங்கிய பிறகு, டிரெண்ட் போல்டை ஏலத்தில் விடுவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு சுமார் 12.50 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும், தீபக் சாகரை சுமார் 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், அவரையும் விடுவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், இரண்டு வீரர்களை விடுவித்து சுமார் 21 கோடி ரூபாயுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மினி ஏலத்திற்கு செல்லும்.

மேலும் சில வீரர்களை விடுவிப்பதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கையில் அதிக பணம் இருக்கும். இந்த பணத்தைக் கொண்டு, ஒரு திறமையான இந்திய வேகப்பந்துவீச்சாளரை வாங்கிவிட்டால், அந்த அணிக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பிரசன்னா கூறியுள்ளார். தற்போது கையில் அதிக பணம் வைத்திருப்பதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அல்லது ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அல்லது ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என மூன்று வீரர்களை வாங்க முயற்சி செய்யும்.

இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் மேலும் பலமடையும். ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் தீர், வில் ஜாக்ஸ், மிட்செல் சாண்ட்னர், ரூத்தர் போர்ட், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களைக் கொண்டு ஒரு பலமான அணியை கட்டமைக்க முடியும்.

சுழற்பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, வில் ஜாக்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னரை வைத்து ஆறு ஓவர்கள் வீச முடியும். மேலும், நமன் தீர் கூடுதல் வீரராக உள்ளார். பும்ரா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் எட்டு ஓவர்களை வழங்குவார்கள். எனவே, கூடுதலாக ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்தால் போதும் என்று பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, கொல்கத்தா அணி கேமரான் கிரீன் மற்றும் பதிரனாவை விடுவிக்கும் என்றும், இதன் மூலம் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள்தான் மினி ஏலத்தில் அதிக பணத்துடன் களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி ஏலத்திற்கு வரவே தேவையில்லை என்றும் பிரசன்னா கூறியுள்ளார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPL 2027Mini AuctionMumbai IndiansPrasannaஆர்ஸ்தீப் சிங்ஐபிஎல் 2027கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னாமினி ஏலம்மும்பை இந்தியன்ஸ்ஹர்திக் பாண்டியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சருமப் பராமரிப்புப் பொருட்களை ஆராயும் நபர் ஆண், பெண் கிரீம்கள்: உண்மையிலேயே வேறுபாடு உள்ளதா?
Next Article விபத்தில் உயிரிழந்த பரதநாட்டிய மாணவி நந்தனாவின் புகைப்படம் பரதநாட்டிய கனவு சிதைந்தது: மாணவி பலி, கிராமம் சோகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜெய்ஸ்வால், வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டு நடத்த…

0 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்த அறிவிப்பு
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஆடாத 8 வீரர்கள்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளே காரணம்!

செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா உட்பட 8 முக்கிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளே காரணம்.

2 Min Read
இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா பேசுகிறார்
விளையாட்டு

இந்தியா – இலங்கை டெஸ்ட்: கே எல் ராகுல்தான் பெரிய ஆபத்து – இலங்கை கேப்டன்

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரில், கே எல் ராகுல்தான் தங்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் என இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார். அனுபவம் வாய்ந்த…

2 Min Read
காலே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

இடதுகை வீரர்களின் அதிரடி: இலங்கையை வீழ்த்திய இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட், மானவ் சுதார்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?