நியூயார்க்கில் இந்திய இளைஞர் துப்பாக்கி சூட்டில் பலி: மர்ம நபர் தேடல்

நியூயார்க்கில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இந்திய இளைஞர் குர்தீப் சிங்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த குர்தீப் சிங் (28) என்ற இந்திய இளைஞர், அங்கு பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், ரிட்ச்மவுண்ட் தெருவில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்துள்ளார். அந்த மர்ம நபர், குர்தீப் சிங் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் குர்தீப் சிங்கின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்தும், இந்த கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த குர்தீப் சிங்கின் உடலை அவரது சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் குர்தீப் சிங்கின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version