MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தானிடம் தோற்கக் கூடாது: ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தானிடம் தோற்கக் கூடாது: ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பாகிஸ்தானிடம் தோற்கக் கூடாது: ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேச்சு

விளையாட்டு

பாகிஸ்தானிடம் தோற்கக் கூடாது: ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேச்சு

Admin
Last updated: ஜூன் 13, 2026 8:52 மணி
Admin
Share
SHARE

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் தொடங்குகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் நிலவும் கடுமையான நெருக்கடி குறித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மனம் திறந்துள்ளார்.

ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய ஜெமிமா, 'நான் வசிக்கும் கட்டிடத்தின் காவலாளி கூட என்னிடம் வந்து, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் தோற்றுப் போங்கள், ஆனால் பாகிஸ்தானிடம் மட்டும் தோற்று விடாதீர்கள்' என்று கூறுவார். மக்கள் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதையும், இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தையும் இதன் மூலம் உணர முடிகிறது என்றார். மேலும் தனது முதல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அனுபவத்தை பகிர்ந்த ஜெமிமா, 'எனது முதல் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக, டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் எங்களிடம் பேசினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு வெளியில் எப்போதும் கடுமையான நெருக்கடி இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. ரசிகர்கள் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்' என்று கூறி எங்களை அவர் உற்சாகப்படுத்தினார் எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் போட்டிக்கு அதிக அழுத்தம் இருந்தாலும், தங்களின் முக்கிய குறிக்கோள் உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே என்று ஜெமிமா கூறினார். 'கோப்பையை ஏந்துவது தான் எங்கள் கனவு. தினமும் காலையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கோப்பையை வெல்வது போல கற்பனை செய்து பார்க்கிறோம். ஏதேனும் ஒன்றை நாம் தொடர்ந்து ஆழமாக சிந்திக்கும்போது, அதை நோக்கி நம் பயணம் தொடங்கும் என நம்புகிறோம். பயிற்சியாளர் அமோல் முஜும்தார் இந்த ஆக்கப்பூர்வமான பயிற்சியை வழக்கமாக்கியுள்ளார்' என்று ஜெமிமா கூறினார். நெருக்கடிகளை கையாள்வது குறித்து பேசிய அவர், பயிற்சி ஆட்டங்களின் போது சில கடினமான சூழ்நிலைகளை உருவாக்கி, அதில் இருந்து எவ்வாறு மீள்வது என்று பயிற்சி மேற்கொள்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய தொடர் எங்களுக்குச் சரியாக அமையவில்லை என்றாலும், வெற்றியை விட தோல்விகள் தான் நமக்கு அதிகமாக கற்றுத் தருகின்றன. அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தற்போது முழு தன்னம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா போன்ற குறிப்பிட்ட ஒரு தனிநபரின் விக்கெட்டை மட்டுமே குறிவைத்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என வீரர்களை அறிவுறுத்தியுள்ளார். டி20 கிரிக்கெட் என்பது மிகவும் குறுகிய வடிவம். எந்தவொரு பந்துவீச்சாளரும் எந்த நேரத்திலும் சவாலாக மாறலாம். ஆட்டத்தில் சூழ்நிலைகள் மிக வேகமாக மாறும். எனவே வீரர்கள் பதற்றமின்றி, அமைதியாக இருந்து திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினால் போதும் என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketWomen's T20 World Cupஇந்தியா vs பாகிஸ்தான்கிரிக்கெட்மகளிர் டி20 உலகக் கோப்பைஜெமிமா ரோட்ரிக்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: 7 இடங்களில் 100°F மேல் வெப்பம் பதிவு
Next Article இந்திய போர்க்கப்பல் தர்காஷ் செஷல்ஸ் சென்றடைந்தது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: “வெற்றி பெற தகுதியே இல்லை”.. மும்பை இந்தியன்ஸ்-ஐ வீழ்த்திய பின் ஆர்சிபி கேப்டன் பேச்சு

ராய்ப்பூர்: 2026 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்…

2 Min Read
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தேர்வான சரன்ஷ் ஜெயின்
விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணியில் சரன்ஷ் ஜெயின்: 11 ஆண்டு உழைப்பின் பலன்

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக 33 வயதான ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆண்டு கால உள்நாட்டு கிரிக்கெட்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா பந்துவீசும் காட்சி
விளையாட்டு

20 டாட் பால், 2 மெய்டன்: பிரசித் கிருஷ்ணாவின் அசத்தல் பந்துவீச்சு!

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில், பிரசித் கிருஷ்ணா 20 டாட் பால் மற்றும் 2 மெய்டன் ஓவர்கள் வீசி அசத்தினார். இங்கிலாந்து தொடக்க ஜோடி 192 ரன்கள்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு

15 வயதில் சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி: புதிய உலக சாதனை

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக இளைய சர்வதேச வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். மான்செஸ்டரில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?