MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு
விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு

Admin
Last updated: June 6, 2026 4:58 pm
Admin
Share
SHARE

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. காலையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிக நேர்த்தியாகப் பந்துவீச, இந்திய பேட்டர்கள் சூழலைப் பொறுமையாகக் கையாண்டனர். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த கேப்டன் சுப்மன் கில், வியக்கத்தக்க வகையில் 6 இடது கை பேட்டர்களைக் கொண்ட வலுவான அணியுடன் களமிறங்கினார். ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவி அளிக்காததால், இந்திய பேட்டர்கள் ஒவ்வொரு ரன்னுக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இணைந்து உறுதியான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே பவுண்டரியுடன் அதிரடியாகத் தொடங்கினாலும், அதைத் தொடர முடியவில்லை. ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி, 12-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வாலை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். அவர் 32 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன், ராகுலுடன் கரம் கோர்த்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை முறியடித்தார். இவர்கள் இருவரும் பொறுப்புடன் விளையாடி 55 ரன்களுக்கான அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இடைவேளையின் போது ராகுல் 37 ரன்களுடனும், சாய் சுதர்சன் 32 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு ஜெய்ஸ்வாலின் விக்கெட் மட்டுமே முதல் செஷனில் கிடைத்த ஒரே வெற்றியாக அமைந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகும், ராகுல், சாய் சுதர்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 86 பந்துகளுடன் ராகுல் அரைசதம் எட்டினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 67 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். 39 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளின் வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ஆப்கானிஸ்தான்இந்தியாகிரிக்கெட்கே.எல். ராகுல்சாய் சுதர்சன்டெஸ்ட் போட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Next Article வானதி சீனிவாசன் பிறந்தநாள்: எல். முருகன் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடுவிரல் சைகை காட்டிய ஆர்சிபி வீரர் டிம் டேவிட்க்கு அபராதம்

ஆர்சிபி வீரர் டிம் டேவிட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின்போது நாகரிகமற்ற சைகை செய்ததற்காக தனது போட்டி ஊதியத்தில் 30% அபராதமும், 2 டிமெரிட் புள்ளிகளும்…

2 Min Read
விளையாட்டு

புஷ்பா ஸ்டைலில் ஜடேஜா கொண்டாட்டம்: நிதிஷ் ரெட்டி விக்கெட் எடுத்த தருணம்!

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டியை 'புஷ்பா' ஸ்டைலில் வீழ்த்தி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த…

2 Min Read
விளையாட்டு

சிஎஸ்கே வெளியேற்றம்: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2026: குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

1 Min Read
உலகம்

இந்திய புவித்தட்டு பிளவு: நிலநடுக்க அபாயம் அதிகரிப்பு!

இந்திய புவித்தட்டு ஒரே பாறையாக நகர்வதில்லை, அது பிளவுபடுகிறது என புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?