MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: 24 வயது வீரர் ஏமாற்றம்.. ரோகித், கில் மீட்கும் முயற்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: 24 வயது வீரர் ஏமாற்றம்.. ரோகித், கில் மீட்கும் முயற்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியா vs ஆப்கானிஸ்தான்: 24 வயது வீரர் ஏமாற்றம்.. ரோகித், கில் மீட்கும் முயற்சி

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: 24 வயது வீரர் ஏமாற்றம்.. ரோகித், கில் மீட்கும் முயற்சி

Admin
Last updated: ஜூன் 17, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

லக்னோ: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக்கைப்பற்றும் முனைப்பில் களம் காண்கிறது.

இந்திய அணி இந்த போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், இன்றைய போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அவருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக தொப்பியை வழங்கினார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி இப்போட்டியில் விளையாட முடியாததால், அவருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், குல்தீப் யாதவ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் தர்விஷ் ரசூலி அறிமுக வீரராக களமிறங்குகிறார். உடல்நலக்குறைவு காரணமாக முகமது நபியும், பயிற்சிப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்மத்துல்லா ஒமர்சாயும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக தர்விஷ் ரசூலி மற்றும் பிலால் சாமி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முகமது சலீம் வீசிய ஷார்ட் பந்தை அடிக்க முயன்று பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீமின் முதல் விக்கெட்டாகும். ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக உள்ள நிலையில், அவர் தனது வாய்ப்பை வீணடித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. விராட் கோலிக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த ஜெய்ஸ்வால், முதல் ஒருநாள் போட்டியில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஏ.எம். கசன்ஃபர் வீசிய நான்காவது ஓவரில் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பவுண்டரிகளை விளாசினர். முகமது சலீம் வீசிய மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIND vs AFGஆப்கானிஸ்தான்இந்தியாஒருநாள் போட்டிகிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா vs ஆப்கானிஸ்தான் 2வது ஒருநாள்: டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான்
Next Article நிதிநிலை மேம்பட ஊழலை ஒழிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் யோசனைகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிவாண்டியில் வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் ஸ்பைடர் மேன் உடையணிந்த இளைஞர்

பிவாண்டியில் ஸ்பைடர் மேன்: வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த இளைஞர்

பிவாண்டியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பைடர் மேன் உடையணிந்த இளைஞர் போக்குவரத்து நெரிசலை…

ஜூலை 8, 2026

அமர்நாத் யாத்திரை: 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில்…

ஜூலை 8, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? சிக்கலான கணக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2026 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுமா? சிக்கலான புள்ளிவிவரங்கள் மற்றும் மற்ற அணிகளின் வெற்றிகளைச் சார்ந்திருக்கும் வாய்ப்புகள்.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், ஜோஸ் பட்லர் விக்கெட்டுகள் சரிவு; சன்ரைசர்ஸ் இளம் பவுலர் அசத்தல்

ஐபிஎல் 2026 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் ப்ரஃபுல் ஹிங்கே, குஜராத் அணியின் முக்கிய…

3 Min Read
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20: இங்கிலாந்து அணியில் இளம் வீரர் ஜேம்ஸ் கோல்ஸ் அறிமுகம்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இளம் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் கோல்ஸ் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 22 வயதான இவர், பல டி20 போட்டிகளில் விளையாடி…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?