ரயிலில் கடைசி நேர டிக்கெட்: சார்ட் தயார் ஆன பிறகும் முன்பதிவு செய்வது எப்படி?

ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலம் ரயிலில் காலி இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறை.

இந்திய ரயில்களில் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு பெறுவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, ரயிலின் முன்பதிவுப் பட்டியல் (Chart) தயார் செய்யப்பட்ட பிறகு பயணச்சீட்டு கிடைப்பது முற்றிலும் கடினம் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகும் கூட ரயில்களில் சில இருக்கைகள் (Berths) காலியாக இருக்க வாய்ப்புள்ளது. தட்கல் (Tatkal) கட்டணம் ஏதுமின்றி, இந்த காலியிடங்களைக் கண்டறிந்து உறுதிசெய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டை முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகளை இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) வழங்குகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி ரயில் கனெக்ட் செயலியின் 'சார்ட் வேகன்ஸி' மற்றும் 'கரண்ட் புக்கிங்' வசதிகளைப் பயன்படுத்தி, இந்த காலி இருக்கைகளைக் கண்டறிந்து சில நிமிடங்களில் உறுதியான டிக்கெட்டைப் பெறலாம். இந்த வசதி, கடைசி நேரப் பயணங்களின் போது தத்கால் கட்டணம் இன்றி, எளிய வழியில் ரயிலில் இருக்கைகளைக் கண்டறிந்து பயணிக்க உதவுகிறது.

**சார்ட் போட்ட பிறகு காலி இருக்கையை முன்பதிவு செய்வது எப்படி?**

முதலில் உங்கள் கைபேசியில் உள்ள 'IRCTC Rail Connect' செயலியைத் திறக்க வேண்டும். அதில் உள்ள 'Train' பிரிவின் கீழ் 'Chart Vacancy' என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலின் எண் அல்லது பெயர், பயணத் தேதி மற்றும் கிளம்பும் நிலையம் (Boarding Station) ஆகிய விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். இதன் மூலம், அந்த ரயிலில் எந்தெந்தப் பெட்டிகளில் (Coaches) எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் திரையில் தோன்றும்.

ஒரு இருக்கை சில குறிப்பிட்ட நிலையங்களுக்கு இடையே மட்டுமே காலியாக இருக்கலாம்; முழுப் பயணத்திற்கும் காலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, நீங்கள் பயணிக்க விரும்பும் தொலைவுக்கு அந்த இருக்கை காலியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். உங்கள் பயணத்திற்கு உகந்த இருக்கை கிடைக்கும் பட்சத்தில், ஐ.ஆர்.சி.டி.சி செயலியின் 'Current Booking' (தற்போதைய முன்பதிவு) தேர்வுக்குச் சென்று பயணிகள் விவரங்களை உள்ளிட்டு, கட்டணத்தைச் செலுத்தி உடனடியாக உறுதியான டிக்கெட்டைப் பெறலாம்.

**கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:**

இரயில்வே விதிகளின்படி, சார்ட் தயாரித்த பிறகு காலியாக இருக்கும் இருக்கைகள் 'Current Booking' முறை மூலம் மட்டுமே வழங்கப்படும். இதில் உறுதிசெய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும். மேலும், சார்ட்டில் தெரியும் காலி இருக்கை நீங்கள் செல்லும் கடைசி நிலையம் வரை காலியாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதனால் முன்பதிவு செய்யும் முன் உங்களுக்கான வழித்தடத்திற்கான காலி இருக்கதானா என்பதைச் சரிபார்ப்பது அவசியமாகும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, கடைசி நேரப் பயணங்களின் போது தத்கால் கட்டணம் இன்றி, ரயிலில் இருக்கைகளைக் கண்டறிந்து பயணிக்கலாம்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version