இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது புதிய பைக் மாடலான Honda CB 500-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் வந்துள்ளது.
Honda CB 500 பைக்கில் 501 சிசி சிங்கிள் சிலிண்டர் ரோட்ஸ்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43.3 என்எம் டார்க் இழுதிறனையும், 28 எச்பி குதிரைத்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், 5 கியர்கள், எல்இடி முகப்பு விளக்குகள், ஸ்கல்ப்டெட் ப்யூல் டேங்க் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பழைய மாடல் முகப்பு விளக்குகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய தோற்றத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய Honda CB 500 பைக் மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. CB 500 Alloy மாடலின் விலை ரூபாய் 2.75 லட்சம் ஆகும். CB 500 Spoke Tubeless மாடலின் விலை ரூபாய் 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 ஆகவும், CB 500 Spoke Tubeless With Stripes மாடலின் விலை ரூபாய் 3 லட்சத்து ஆயிரத்து 900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் ஆன்-ரோடு விலைகள் முறையே ரூபாய் 3 லட்சத்து 31 ஆயிரத்து 159 (CB500 Spoke), ரூபாய் 3 லட்சத்து 59 ஆயிரத்த 572 (CB500 Spoke), மற்றும் ரூபாய் 3 லட்சத்து 61 ஆயிரத்து 854 (CB500 Spoke with Stripe) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, டூயல் சேனல் ஏபிஎஸ், டார்க் கண்ட்ரோல் வசதி, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் கம்யூனிகேஷன் ஃபங்ஷன் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சஸ்பென்ஷன் அமைப்பைப் பார்த்தால், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, பின்பக்கம் டூயல் ஹைட்ராலிக் காய்ல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் செமி டிஜிட்டல் வசதியுடனும், ஸ்பீடோமீட்டர் அனலாக் வசதியுடனும் வருகிறது. ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி, பிரேக்/டெயில் விளக்குகள் எல்இடி வசதி போன்றவையும் இந்த பைக்கின் சிறப்பம்சங்களாகும். சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
