இந்து சமய அறநிலையத்துறை: 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

இந்து சமய அறநிலையத்துறையில் முக்கிய நிர்வாக சீர்திருத்தமாக, 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட இணை ஆணையர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள இடங்கள் விவரம்:

1. பா.விஜயா – மண்டலம்-1, சென்னை.
2. கி.ரேணுகாதேவி – மதுரை மாவட்ட இணை ஆணையர்.
3. சி.மாரியப்பன் – ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் (இணை ஆணையர்/செயல் அலுவலர்).
4. பிரகாஷ் – ஸ்ரீரங்கம் திருச்சி அரங்கநாதசுவாமி திருக்கோவில்.
5. வி.குமரேசன் – சேலம் மாவட்ட இணை ஆணையர்.
6. ஜெ.முல்லை – நாகை மாவட்ட இணை ஆணையர்.
7. என்.சுரேஷ் – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.
8. க.செல்லத்துரை – விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர்.
9. எஸ்.சிவராம் குமார் – தஞ்சாவூர் மாவட்ட இணை ஆணையர்.
10. து.ரத்தினவேல் பாண்டியன் – திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர்.
11. ப.கவிதா பிரியதர்ஷினி – திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையர்.
12. வி.சபர்மதி – ஈரோடு மாவட்ட இணை ஆணையர்.
13. பி.கே.கவெனிதா – திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர்.
14. தி.அனிதா – காஞ்சிபுரம் மாவட்ட இணை ஆணையர்.
15. சி.குமரதுரை – இணை ஆணையர் தலைமையிடம்.
16. க.ரமணி – சென்னை மண்டலம்-3 இணை ஆணையர்.
17. டி.சிவலிங்கம் – வேலூர் மாவட்ட இணை ஆணையர்.
18. ஆர்.ஹரிஹரன் – பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்.

மேலும், மூன்று இணை ஆணையர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டு, புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்:

1. ஆர்.பொன்சுவாமிநாதன் – அழகர் கோவில் மதுரை கள்ளழகர் திருக்கோவில் (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).
2. நித்யா – திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).
3. அன்னக்கொடி – மயிலாப்பூர் சென்னை கபாலீசுவரர் திருக்கோவில் (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).

இந்த பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில்களின் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலன் சார்ந்த பணிகளில் இந்த மாற்றங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version