14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (ஜூன் 07) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை (ஜூன் 8) தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் நிலவும். இதன் காரணமாக, கடலோர தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் கனமழை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். திடீர் கனமழை மற்றும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version