அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த வானிலை மாற்றங்கள் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version