MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஹர்திக் பாண்டியா: சிஎஸ்கே அணிக்கு சடகோபன் ரமேஷ் எச்சரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஹர்திக் பாண்டியா: சிஎஸ்கே அணிக்கு சடகோபன் ரமேஷ் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஹர்திக் பாண்டியா: சிஎஸ்கே அணிக்கு சடகோபன் ரமேஷ் எச்சரிக்கை!

விளையாட்டு

ஹர்திக் பாண்டியா: சிஎஸ்கே அணிக்கு சடகோபன் ரமேஷ் எச்சரிக்கை!

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 3, 2026 11:23 காலை
Sri Prem Kumar R
Share
முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் பேசுகிறார்
ஹர்திக் பாண்டயாவை சிஎஸ்கே வாங்கக் கூடாது: சடகோபன் ரமேஷ்
SHARE

2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்றங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஹர்திக் பாண்டயாவை வாங்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, அந்த அணியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவரை சிஎஸ்கே அணி வாங்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில், சடகோபன் ரமேஷ் தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அதற்காக சிவம் துபே, ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை வாங்குவது சரியான முடிவு அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் சிஎஸ்கே தனது இளம் வீரர்களை இழக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஹர்திக் பாண்டியாவை ஒரு வீரராக வேண்டுமானால் சிஎஸ்கே அணி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது என்றும் சடகோபன் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், 'ஹர்திக்கை நான் ஒரு சிறந்த வீரராகப் பார்க்கிறேன், ஆனால் அவர் ஒரு மோசமான கேப்டன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தாலும், அவர் விலகிய பிறகும் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசன்களில் புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10-வது இடங்களுக்குச் சரிந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தனது திறமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் சடகோபன் ரமேஷ் குற்றம் சாட்டினார். கடந்த சீசனில் அவர் 10 போட்டிகளில் வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். முக்கியமான ஓவர்களை அவர் வீசவில்லை, மேலும் பேட்டிங்கிலும் மிகவும் பின் வரிசையில் களம் இறக்கப்பட்டார்.

குஜராத் அணியில் இருந்தபோது, ஆஷிஷ் நெஹ்ரா அளித்த அழுத்தம் மற்றும் வழிகாட்டுதலே அவரை சிறப்பாகச் செயல்பட வைத்தது. ஹர்திக்கிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர ஒரு சிறந்த கேப்டனும், தகுதியான பயிற்சியாளரும் அவசியம் தேவை என்று சடகோபன் ரமேஷ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CSKHardik PandyaIPLஐபிஎல்சடகோபன் ரமேஷ்சிஎஸ்கேசென்னை சூப்பர் கிங்ஸ்மும்பை இந்தியன்ஸ்ஹர்திக் பாண்டியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் தங்க நகை கடை சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு: வெள்ளி விலை மாற்றம் இல்லை
Next Article ஆவின் நிறுவனத்தின் புதிய மில்க் ரஸ்க் தயாரிப்பு ஆவினில் ₹20-க்கு புதிய மில்க் ரஸ்க் அறிமுகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷன் விடுதலை

டெல்லி நீதிமன்றம், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து…

ஆகஸ்ட் 3, 2026

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் விடுவிப்பு

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி.…

ஆகஸ்ட் 3, 2026

நாடாளுமன்ற இரு அவைகள் எதிர்க் கட்சி அமளியால் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல்…

ஆகஸ்ட் 3, 2026

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பின்னடைவு

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

இந்தியா ஏ அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டம்
விளையாட்டு

இந்தியா ஏ அபார வெற்றி: குர்னூர் ப்ராரின் அசத்தல் பந்துவீச்சு

இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா ஏ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. குர்னூர் ப்ராரின் 10…

3 Min Read
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த்
விளையாட்டு

அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு: கிரிஸ் ஸ்ரீகாந்த்

ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்த கிரிஸ் ஸ்ரீகாந்த், சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார்
விளையாட்டு

முகத்திற்கு நேராக கத்திய அறிமுக வீரர் குர்னூர் பிரார்: வைரல் வீடியோ

பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், பென் டக்கெட்டை வீழ்த்திய பின் முகத்திற்கு நேராக கத்தி…

3 Min Read
விளையாட்டு

இந்தியாவுக்கு சவால் விடும் அயர்லாந்து வீரர்கள்: யார் யார்?

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அயர்லாந்து அணியின் கேப்டன் லார்கன் டக்கர், ஹாரி டெக்டர், மேத்யூ ஹம்ப்ரிஸ் ஆகிய மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?