சென்னையில் இன்று (செப்.17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடுகள், உலகப் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் போக்கின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருவதால், சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. மேலும், கடந்த 1-ம் தேதி அன்று, 'தேவையில்லாமல் தங்கம் வாங்காதீர்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்தச் சூழல்களுக்குப் பிறகு, தங்கத்தின் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் நேற்று (புதன்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 வரை சற்று உயர்ந்திருந்தது. இந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் விலை குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு பவுன் தங்கம் ரூ.440 குறைந்து, ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,284-க்கும், 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.54 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,780-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை, இன்று அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்' என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

