தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று (செப்டம்பர் 5) திடீரென சரிந்து நகை வாங்குவோருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து கணிக்க முடியாத வகையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், மாத இறுதியில் திடீரென குறைந்து வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியது. இருப்பினும், மீண்டும் விலை உயர்ந்ததால், தங்கம் வாங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவி வந்தது.

நேற்று, செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880 ஆகவும் விற்பனையானது. இதேபோல், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255 என்ற விலையில் விற்பனையானது.

இந்நிலையில், இன்று நகை பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520 என்ற விலையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.170 குறைந்து ரூ.14,190 ஆக விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000 ஆகவும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை சரிவு, தங்க நகை வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version