2004 ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'கில்லி' திரைப்படத்தில், 'ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா' என்ற புகழ்பெற்ற வசனம் பேசப்படும் தொடக்க காட்சியில் விஜய்யுடன் நடித்த நடிகர் சிவா காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படைப்பாக அமைந்த 'கில்லி' திரைப்படம், நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. வித்யாசாகரின் இசையில் வெளியான 'அப்படிப் போடு', 'அர்ஜுனர் வில்லு' போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக உள்ளன.
இந்நிலையில், 'கில்லி' படத்தின் ஆரம்ப காட்சியில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் சிவா மறைந்ததாக வெளியான தகவல், அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. இந்த செய்தி திரையுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'கில்லி' திரைப்படம் மட்டுமின்றி, 'குருவி', 'மதுர' போன்ற விஜய்யின் மேலும் பல வெற்றிப் படங்களிலும் நடிகர் சிவா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
'கில்லி' படத்தில், விஜய்யை பார்த்து 'இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமா எனக்கு பயம் கிடையாது டா, ஏன்னா ஆல் எரியலையும் ஐயா கில்லி டா' என்று விஜய் வசனம் பேசும் காட்சியின்போது, அவருடன் நடித்தவர் தான் நடிகர் சிவா.
தற்போது நடிகர் சிவாவின் மரணச் செய்தி வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.
