முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான மேனகாவின் சகோதரியின் மகள் 23 வயது சினேகா, தனபாலின் மகள் 17 வயது கனிஷ்கா, தனபாலின் மகன் 12 வயது சுர்ஜித் ஆகிய ஐந்து பேரும் காரில் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் என்பவர் சரக்கு லாரியை பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்திருக்கிறார். கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனபால், மேனகா, சினேகா, கனிஷ்கா ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் சுர்ஜித் படுகாயமடைந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுர்ஜித்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏழை ஏழிய மக்கள் நடுத்தர மக்கள் மருத்துவம் காப்பீடு ஏழிய முறையில் மருத்துவ செயல் படுத்தவும் அவர்களுக்கு டாக்டர் சொல்ரது இன்சூரன்ஸ் பற்றி புரிதல் கிடையாது அனைத்து மருத்துவ பக்கத்தில் முதல்வர் காப்பீடு திட்டம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் அவர்கள் தின கூலி மாதம் சம்பளம் கம்மி இப்படி பட்ட மக்கள் சேர வேண்டும் கலெக்டர் கையெழுத்து வேண்டும் அப்படி சொல்லி அலைய விட வேண்டாம்
அன்பு அண்ணா முதல்வர் விஜய்