ஸ்டாலினை வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா?? வி.எஸ் பாபு அதிருப்தி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்தார் வி.எஸ் பாபு.

முன்னாள் முதல்வரை தோற்கடித்த வி.எஸ் பாபுவிற்கு அமைச்சரவையில் முக்கியமான இடம் ஒதுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நேற்று வெளியாகியுள்ள 9 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

ஸ்டாலினை வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா? அமைச்சரவையில் இடம் இல்லையா என்ற கேள்வியோட வி.எஸ் பாபு அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியினர் அவரை சமாதானப்படுத்த முயற்சிப்பதாகவும், அவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு ஏதேனும் வழங்கப்படலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், கட்சியின் சமூக மற்றும் மண்டல சமநிலையை கருத்தில் கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. எதிர்காலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால் விஎஸ் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version