தனுஷ் குடும்பத்தின் அடுத்த வாரிசு: ‘லவ் ஓ லவ்’ ஜூலை 10ல் வெளியீடு!

நடிகர் தனுஷின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக களமிறங்கும் பவிஷ் நடித்துள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷின் அக்காவான கார்த்திகா தேவியின் மகன்தான் பவிஷ். இவர் முதன்முறையாக இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

புகழ்பெற்ற கவிதாலயா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமும், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'பகிரி', 'சிக்லெட்ஸ்' போன்ற படங்களை இயக்கிய ஜகதீசன் சுப்பு இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பவிஷுக்கு ஜோடியாக இளம் நடிகை அனைகா சோதி நடித்துள்ளார். தனுஷின் குடும்பத்தில் இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கஸ்தூரி ராஜா, நடிகர் தனுஷ் ஆகியோர் ஏற்கனவே தங்கள் திறமையால் தனி முத்திரை பதித்துள்ளனர். தற்போது பவிஷும் ஹீரோவாக களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இளம் தலைமுறையினருக்கான காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் புரமோஷன் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version