தேசிய விருது சர்ச்சை: நடிகர் தனுஷ் விளக்கம்

நடிகர் தனுஷ்

72-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' மற்றும் 'ராயன்' படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இதில் 'ராயன்' படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

பல ரசிகர்களும், விமர்சகர்களும் 'மகாராஜா', 'வாழை', 'மெய்யழகன்' போன்ற படங்கள் தேசிய விருதுக்கு தகுதியானவை என்றும், ஆனால் சராசரி விமர்சனங்களைப் பெற்ற 'ராயன்' படத்திற்கு விருது வழங்கப்பட்டது ஏன் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், 'தங்கலான்' படத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடல் அமைப்பையே மாற்றி, மிகக் கடுமையாக உழைத்திருந்தார். அவருக்கு இந்த முறை சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தனுஷின் 'ராயன்' படம் குறித்த விவாதம் இணையத்தில் அதிகரித்ததுடன், அது தொடர்பான மீம்ஸ்களும் பரவலாகின.

இந்த விமர்சனங்களுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் ஏற்கனவே விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியபாளையம் அருகே அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமுக்கு நடிகர் தனுஷ் வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து 'ராயன்' பட தேசிய விருது சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், 'ராயன்' படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. 'ராயன்' வெளியான வருடத்தில் பல நல்ல படங்கள் வெளியாகின. அதைப் பாராட்டிய ரசிகர்கள், தங்களுக்கு அதிருப்தி இருப்பதை வெளிப்படுத்தினர். அதை நான் மதிக்கிறேன். இதற்கு முன்னர் 'புதுப்பேட்டை', 'வடசென்னை', 'மயக்கம் என்ன', 'மரியான்' போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அப்போது அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை. அப்போதும் யாரும் ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என கேட்கவில்லை.

'ராயன்' திரைப்படத்துக்கு தேசிய விருது தானாகவே கிடைத்தது. ஒரு தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. தயவுசெய்து என்னை தட்டிவிடாமல் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்' என்று அவர் கேட்டுக்கொண்டார். தனுஷின் இந்தப் பேச்சு, 'ராயன்' பட தேசிய விருது குறித்த சர்ச்சைக்கு ஒரு முடிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version