முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த 70 வயது மூதாட்டியை கைது செய்ய திமுக அரசு ஐந்து தனிப்படை அமைத்திருப்பதாக சிடிஆர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதல்வரை அச்சுறுத்தும் வகையில் பேசினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் ஆட்சியில் ட்வீட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது? முதல்வருக்கு எதிராக ட்வீட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டது. முதல்வருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு" என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், "மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அவதூறாக, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை. சாதாரண பிரச்சனை இல்லை. பொது மக்கள் அல்லது தமாகவினர் கேட்டால் பெரிய கைகலப்பு உருவாகும். எம்எல்ஏ என்ன பேச வேண்டும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. கடந்த ஆட்சியில் யாரும் முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசவில்லை. மாப்பிள்ளை, மகன், முதல்வரை சொன்னால் குண்டாஸ் போட்டனர். இப்போது இவர்கள் நாடகம் ஆடுகின்றனர். கரூர் காரர் கட்டிலுக்கு அடியில் அழுகிறார். காரில் ஏறி மயக்கம் வருகிறது என தற்போது எம்எல்ஏ அழுகிறார். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? புகார் வந்துள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடகம் போட்டால் என்ன செய்ய முடியும்?"
அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் விலகி வந்தால் அது குதிரை பேரம் என்றால் எப்படி? எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டுள்ளது. பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசிய ஆடியோவும் உள்ளது. நாங்கள் யாரிடமாவது பேசி உள்ளோமா? எந்த உத்தரவாதமும் கிடையாது. அவர்களாக விரும்பி வந்துள்ளனர். எங்கள் எம்எல்ஏவிடம் பேசியது தான் குதிரை பேரம்" என்றும் நிர்மல் குமார் கூறினார்.
