காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி

காதலுக்கு தடையான பெண்ணை கொன்று பிரியாணி செய்த கொடூர ஜோடி

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் இருந்த பெண் சடலம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஆக்ரா ரயில் நிலையத்தை அடைந்தபோது, ஒரு பொதுப்பெட்டியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டறியப்பட்டது. அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆக்ரா மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சடலத்தின் தடயங்களை வைத்து, சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். சூட்கேஸிற்குள் சென்னை முகவரியுடன் கூடிய ஒரு துணிக்கடை பை கிடைத்ததை அடுத்து, ஆக்ரா போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பல மணி நேர தீவிர ஆய்வுக்குப் பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும் பெண்ணும், அதை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது.

அவர்கள் சென்ற பாதையில் உள்ள 200க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த ஜோடியின் வீடு சென்னை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டின் ஒரு பகுதியில் பிரியாணி சமைக்க வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தில் மனித மாமிசத்தை வைத்து பிரியாணி சமைக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதில் ஒரு பகுதியை பிரியாணி சமைத்து உண்டதும், மீதி உடலை சூட்கேசில் வைத்து ரயிலில் ஏற்றிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில், காதலர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பசுபதி மாஜி என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் தங்கி ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், மாணிக் லஸ்கருக்கு ஏற்கனவே பெருங்களத்தூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது.

சம்பவம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை, நிஷா இந்த காதலர்களுடன் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் ஒன்றாக தங்கியிருந்துள்ளார். மாணிக் லஸ்கர் மற்றும் பசுபதி மாஜியின் காதலுக்கு நிஷா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை இருவரும் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, உடலை பிரியாணி சமைத்து உண்டது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பசுபதி மாஜி மற்றும் மாணிக் லஸ்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version