தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதகமாக முடக்கியுள்ளது என மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை கண்டித்து, சென்னையில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டில் பாஜக அரசு தலையிடுவதாகவும், தங்களுக்கு சாதகமாக ஆணையத்தை பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை மாலை 5 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசின் தேர்தல் ஆணையத்தின் மீதான தலையீட்டை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த போராட்டம் மூலம் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டிப்போம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version