சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணியை முடித்துவிட்டு காரில் புறப்படும்போது, அவரைச் சூழ்ந்திருந்த பொதுமக்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
சென்னை சேத்துப்பட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒரு இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி மற்றும் உணவுக்கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் மையங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
இந்த திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஈரக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து, இதுபோன்ற உயிரி எரிவாயு தயாரிப்பு நிறுவனங்களை அமைப்பதன் மூலம் பயோ சிஎன்ஜி-யை உற்பத்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இந்த இயற்கை எரிவாயு, வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆய்வை முடித்துவிட்டு அவர் புறப்பட்டபோது, அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்திய பின்னர் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.
