MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை வருகிறார் முதல்வர் விஜய்: பிரம்மாண்ட பெரியார் நூலகத்தை திறந்து வைக்கிறார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை வருகிறார் முதல்வர் விஜய்: பிரம்மாண்ட பெரியார் நூலகத்தை திறந்து வைக்கிறார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை வருகிறார் முதல்வர் விஜய்: பிரம்மாண்ட பெரியார் நூலகத்தை திறந்து வைக்கிறார்

தமிழ்நாடு

கோவை வருகிறார் முதல்வர் விஜய்: பிரம்மாண்ட பெரியார் நூலகத்தை திறந்து வைக்கிறார்

Fernandez
Last updated: அக்டோபர் 13, 2026 1:34 மணி
Fernandez
Share
முதல்வர் விஜய் கோவை பெரியார் நூலகத்தை திறந்து வைக்கிறார்
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.
SHARE

கோயம்புத்தூர் மாநகருக்கு முதல்வர் விஜய் வருகை தருகிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், சிறைத்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் என்ற பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன.

ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பில், கட்டுமானப் பணிகளுக்கு ரூ.245 கோடியும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.50 கோடியும், மின் புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலக வளாகத்தில் பெரியாரின் திருவுருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

பெரியார் நூலக வளாகம் 'ஏ' மற்றும் 'பி' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம் மற்றும் ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது தளத்தில், சொந்தமாக புத்தகங்கள் கொண்டு வந்து படிப்பவர்களுக்கான தனி இடம் மற்றும் சிறுவர்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு மற்றும் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன. நான்காவது தளத்தில் வரலாற்றுப் புத்தகப் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு மற்றும் நடப்பு இதழ்கள் பிரிவு ஆகியவை உள்ளன.

ஐந்தாவது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஆறாவது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர் செயல்படும். ஏழாவது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகிற 16 ஆம் தேதி பெரியார் நூலகத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் நூலகத்திற்கு வரும் முதல்வர் விஜய், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதற்காக பெரியார் நூலக வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijaycoimbatorePeriyar Libraryகோவைபெரியார் அறிவுலகம்பெரியார் நூலகம்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஊறவைத்த வெந்தயம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய தகவல் தினமும் ஊறவைத்த வெந்தயம்: நோய்களை கட்டுப்படுத்தும் அற்புத பயன்கள்!
Next Article நடிகர் டோபி மாகுவேர் தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயரின் திருமணத்தை நடத்தி வைக்கிறார் முன்னாள் மனைவிக்கு மறுமணம்: ஸ்பைடர்மேன் டோபி மாகுவேர் செய்த காரியம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு

ராகுல் காந்தி மனுவில் 14 குறைகள்: உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது

ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் 14…

அக்டோபர் 14, 2026

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் மாங்ரோல் நீர்மூழ்கி வேவுக்கப்பல்

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில், நீர்மூழ்கிக் கப்பல்களைக்…

அக்டோபர் 13, 2026

பஞ்சாபில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: இறுதிப் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி…

அக்டோபர் 13, 2026

டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த…

அக்டோபர் 13, 2026

பரூச் ஜாமியா மசூதி: சமண கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பரூச்​ ஜாமியா மசூதி, சமணக் கோயிலாக…

அக்டோபர் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஈரோட்டில் மூடப்பட்ட மதுக்கடைகள் திறப்பு: மக்கள் அதிர்ச்சி

ஈரோட்டில் மூடப்பட்ட 5 எலைட் மதுபான கடைகள் திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலிட உத்தரவால் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி – திருமாவளவன்

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி சொல்வேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக, தமாகா இணைந்து பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்றும்…

2 Min Read
தமிழ்நாடு

மோடியிடம் தாகூர் பொன்மொழிகள்: சுவீடன் பிரதமர் வழங்கிய சிறப்புப் பரிசு!

சுவீடன் சென்ற பிரதமர் மோடியிடம், அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், ரவீந்திரநாத் தாகூர் கையால் எழுதிய 2 பொன்மொழிகளின் நகல்களை வழங்கினார். இது இரு நாட்டு உறவின்…

1 Min Read
ஈரோடு அரசு பள்ளியில் தமிழ் கற்கும் வடமாநில மாணவர்கள்
தமிழ்நாடு

ஈரோடு அரசு பள்ளியில் தமிழ் கற்கும் வடமாநில மாணவர்கள்

ஈரோடு அரசு பள்ளியில் வடமாநில மாணவர்கள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். 46 மாணவர்களில் 44 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளை…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?