MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்: முக்கிய அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்: முக்கிய அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்: முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு

நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்: முக்கிய அறிவிப்பு

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 8:54 மணி
Fernandez
Share
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம்
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை
SHARE

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பொது கட்டிடங்கள் துறை வெளியிட்டுள்ளது. இட நெருக்கடி மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரசு தலைமை செயலாளர் சாய்குமார் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகம், செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகள் மாற்றப்பட உள்ளன. இந்த இடமாற்றத்தின் காரணமாக, தற்போது 10வது தளத்தில் இயங்கி வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள், முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு (CMO Social Media), கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சில அலுவலர்களின் அலுவலகங்கள், எழுதுப்பொருட்கள் அறைகள் ஆகியவை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் உள்ள தரைத்தளம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுக்கு மாற்றப்படுகின்றன.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், கலைவாணர் அரங்கத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து, அங்கு பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் தற்போதுள்ள சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையும், அத்துறை அமைந்துள்ள 9வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

இந்த இடமாற்றப் பணிகளுக்காக, கோட்டப் பொறியாளர் (கட்டடங்கள்), பொதுப்பணித்துறை, தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணிணி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்து பொருட்களையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார். உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) மற்றும் (மின்சாரம்) ஆகியோரும், இடமாற்றம் செய்யப்பட்ட அறைகளுக்கு தேவையான மின்சார மற்றும் இதர வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-|| பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி (Internet) மற்றும் தொலைபேசி வசதிகளை உடனடியாக செய்து தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொது (கட்டடங்கள்)த்துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அதில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை பாதுகாப்பாக எடுத்துக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் மூலம் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதலமைச்சரின் அலுவலகப் பணிகள் மேலும் திறம்பட நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiCM OfficeGovernment AnnouncementNamakkal Kavignar Maligaiஅரசு அறிவிப்புசெய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைசென்னைசேப்பாக்கம் கலைவாணர் அரங்கம்நாமக்கல் கவிஞர் மாளிகைமுதலமைச்சர் அலுவலகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article Odysse Evoqis இ பைக் Odysse Evoqis இ பைக்: ஒருமுறை சார்ஜில் 140 கி.மீ மைலேஜ், விலை என்ன?
Next Article தேசியப் பங்குச் சந்தையில் தங்க முதலீடு குறித்த அறிவிப்பு பங்குச்சந்தையில் தங்கம்: புதிய முதலீட்டு முறை அறிமுகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன்
தமிழ்நாடு

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு. தவெக புகார் அடிப்படையில் கைது. 15 நாட்கள் நீதிமன்றக் காவல்.

1 Min Read
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
தமிழ்நாடு

பரமசிவத்தின் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

மதுரை பரமசிவத்தின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. தலையில் அறுவை சிகிச்சை காயம், மூளை ரத்தக்கசிவு, கொழுப்பு அடைப்பு போன்ற தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.…

3 Min Read
சென்னை வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

சென்னை வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

1 Min Read
அரக்கோணம் காவல் நிலையத்தில் விசாரணை
தமிழ்நாடு

அரக்கோணத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி தாக்கி நகை கொள்ளை

அரக்கோணத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?