திமுகவின் நாகரிகமற்ற பேச்சுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்

சட்டப்பேரவையில் திமுகவினரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனங்களை முன்வைத்ததை சட்டப்பேரவையில் இன்று (செப்.7) சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். மேலும், தங்களுக்கு வாக்களிக்காத மக்களை 'நல்ல சாவு வராது' என திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்ததையும் அவர் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் ஆபாசமாகவும் நாகரிகமற்ற முறையிலும் பேசுவது தவறு என்ற உணர்வே இல்லாமல் பேசி வருவதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டினார். தங்களுக்கு வாக்களிக்காத மக்களை இப்படி விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். சட்டமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

1970-ல் வீராணம் திட்டத்திற்கு சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டுமெனில் கமிஷன் தர வேண்டும் என அப்போதைய திமுக அரசில் கேட்கப்பட்டதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார். டெண்டர் வேண்டும் என்றால் இரண்டரை சதவீதம் கமிஷன் வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக சர்க்காரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டாம் என அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் முதல்வர் விஜய் குற்றம்சாட்டினார். இதுகுறித்த ஆதாரங்கள் வேண்டுமென்றால் சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு செல்லலாம் என்றும், 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்காரியா குழு எழுதிய புத்தகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் திமுக ஊழல் செய்து வருவதாகவும், கட்சி நிதிக்கான ஆதாரத்தை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக குறித்து ஆவேசமாகப் பேசினார். 3 கோப்புகளை வெளியிட வேண்டும் என திமுக சவால் விட்ட நிலையில், சாம்பிளுக்கே திமுக அரண்டு போனதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும், திமுக எதை செய்தாலும் குடும்பத்தோடு தான் செய்வார்கள் என்றும், கட்சி நிதியைக் கூட சேர்ந்து தான் வாங்கியுள்ளனர் என்றும் முதல்வர் விஜய் குற்றம்சாட்டினார். கட்சி நிதி என்ற பெயரில் ரூ.10 முதல் ரூ.100 வரை வாடிக்கையாளர்களிடம் சேகரித்தது திமுக என்றும் அவர் கூறினார்.

2 துறையை வெளியிட்டதற்கே இப்படி என்றால், மற்ற துறைகளை வெளியிட்டால் திமுக என்னவாகும் என்றும், ஆதாரம் வேண்டும் எனக் கேட்டவர்களுக்கு ஆதாரம் போதுமா என்றும் முதல்வர் விஜய் ஆவேசமாகக் கேட்டார். தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும், திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும் என அவர் கர்ஜித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version