MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

தமிழ்நாடு

கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

Admin
Last updated: மே 28, 2026 11:08 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் சார்பில், கோடை வெயிலின் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது, உடல் வியர்வை மற்றும் இரத்த ஓட்டம் மூலம் அதிக வெப்பத்தை வெளியேற்றி தன்னை சீராக வைத்துக்கொள்ளும். இருப்பினும், கோடை வெப்பம் அதிகமாகும்போது உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும், வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் அளவுக்கு நீர் அருந்த வேண்டும். சூடான பானங்களைத் தவிர்த்து, மோர், உப்பு கலந்த அரிசிக்கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்றவற்றை அருந்தலாம். வெளியே செல்லும்போது தலையில் பருத்தி துணி, தொப்பி அல்லது குடை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம். வியர்வை எளிதில் வெளியேறக்கூடிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகலில் உடற்பயிற்சி செய்வதையும், தேவையில்லாமல் வெயிலில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மூடி, இரவு நேரங்களில் காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது.

வெயிலில் வேலை செய்யும்போது தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக நிழலான இடத்திற்குச் சென்று தண்ணீர், எலுமிச்சை சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், அதிக தாகம், கால் அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். யாரேனும் மயக்கமடைந்தால், உடனடியாக மருத்துவரை அழைத்து, அவர்களை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். நாடித்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதித்து, கால் மற்றும் இடுப்பை உயர்த்தி, உடைகளை தளர்த்தி, ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தெளித்து, காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நல்வாழ்வு மையங்கள், 16 சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. இங்கு தேவையான மருந்துகளும், 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. மேலும், வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் பொதுமக்கள் மாநகராட்சியின் 57 வீடற்றோர் காப்பகங்களில் தங்கி கொள்ளலாம். இந்த முன்னேற்பாடுகள் மற்றும் மாநகராட்சி அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CorporationSummer Heatகோடை வெப்பம்சுகாதார அறிவுரைகள்சென்னை மாநகராட்சிவெப்ப பாதிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர், ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது
Next Article இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி: ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய் இன்று காலை சட்டமன்றத்தில் முதல் உரை ஆற்றிய நிலையில், சாலைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
நடிகை குஷ்பு நேர்காணலில் பேசுகிறார்
தமிழ்நாடு

ரஜினி படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி: குஷ்பு விளக்கம்

நடிகை குஷ்பு, ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கான காரணத்தையும், 'ராயன்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்த சந்தேகங்களையும் விளக்கியுள்ளார்.

3 Min Read
தமிழ்நாடு

‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில்,…

1 Min Read
அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சுற்றுச்சூழல் மாநாடு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஜூலை 26ல் திருச்செந்தூரில் அண்ணாமலை சுற்றுச்சூழல் மாநாடு

தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு, அடுத்ததாக சுற்றுச்சூழல் கருத்தாக்கத்துடன் திருச்செந்தூரில் ஜூலை 26ல் மாநாடு நடத்துகிறது. இதற்கான…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?