அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, நாளை முதல் (ஜூன் 27) அடையாறு LB சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக L.B சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து L.B x M.G சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளதால், 27.06.2026 முதல் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன."

திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், L.B x M.G சாலை சந்திப்பிலிருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, M.G சாலை, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக L.B சாலையை அடையுமாறு திருப்பி விடப்படுகின்றன. இதேபோல், பெசன்ட் நகரில் இருந்து 7வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலை அடைந்து வலதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை இடதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக L.B சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்படுகிறது.

L.B சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ சாலை வழியாக சென்று, வலதுபுறம் திரும்பி 11வது குறுக்கு சாலையில் சென்று, இடதுபுறம் திரும்பி 8வது குறுக்கு சாலை அடைந்து, பின்பு வலதுபுறம் திரும்பி 10வது குறுக்கு சாலை வழியாக M.G சாலை அடைந்து தங்கள் இலக்குகளை அடையலாம். இதுவரையில் சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக L.B சாலை வரையிலும், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை வரை ஒரு வழிப்பாதையாக இருந்த சாலை தற்போது இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

அதே போல், சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும், 11வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்படுகிறது. திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள் அனைத்தும் L.B x M.G சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி இந்திரா நகர் 2வது அவென்யூ சாலை அடைந்து வலதுபுறம் திரும்பி 1வது பிரதான சாலை வழியாக வலது மற்றும் இடதுபுறம் திரும்பி 1வது அவென்யூ சாலை அடைந்து வலதுபுறம் திரும்பி L.B X Indian Oil Petrol Bunk சிக்னல் சந்திப்பு அடைந்து இடதுபுறம் திரும்பி பின் தங்கள் இலக்குகளை அடையலாம். இந்திரா நகர் 2வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version