MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

இந்தியா

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 10:02 மணி
Fernandez
Share
CJP நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்
CJP நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்.
SHARE

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் பாதுகாக்கிறீர்கள் என மத்திய அரசுக்கு CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் ஜனதா பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, சமூக சேவகர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் அரசியல் என்பது வெறும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதும், தேர்தலில் வெற்றி பெறுவதும்தான் என்று அவர் விமர்சித்தார். மக்களின் கேள்விகளுக்கு பொறுப்புடனும், கடமையுடனும் பதிலளிப்பது அரசியல் கடமைகளில் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கிறீர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்க வேண்டும் என அபிஜித் தீப்கே வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் போராட்டம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்ய 34 நாட்கள் ஆகிவிட்டதாகவும், அரசாங்கம் இன்னும் அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் வெளியாட்கள் சிலர் போராட்டத்திற்குள் நுழைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காவல் துறையினர் ஒரு லாரி நிறைய கற்களை வரவழைத்து, பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்திற்குள் ஊடுருவி, காவல் துறையினர் மீது கல்லெறிந்து, அதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CJPஅபிஜித் தீப்கேகரப்பான் ஜனதா பூச்சி கட்சிதர்மேந்திர பிரதான்நீட் தேர்வுபாஜகபிரதமர் மோடிமாணவர் போராட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு
Next Article விஜய் ரசிகர்கள் அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிடும் காட்சி விஜய் பட வெற்றிக்கு மண்சோறு நேர்த்திக்கடன்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவை முடக்கம் குறித்த அறிவிப்பு

மாணவர் போராட்டம்: டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே இணைய சேவை முடக்கம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இணைய…

ஜூலை 23, 2026

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய…

ஜூலை 23, 2026

ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா…

ஜூலை 23, 2026

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம்: காந்தி சமாதியில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள…

ஜூலை 23, 2026

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் நீரில் நனைந்து நடனமாடிய வீடியோ வைரல்!

பாட்னாவில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில், மாணவர்கள்…

ஜூலை 23, 2026

You Might Also Like

பிரதமர் நரேந்திர மோடி சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார்
இந்தியா

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

1 Min Read
ஓமனில் சித்திரவதைக்குள்ளான ஹைதராபாத் பெண் ஷப்னம் பேகம்
இந்தியா

ஓமனில் சித்திரவதைக்குள்ளான ஹைதராபாத் பெண்: நரக வேதனையில் ஷப்னம் பேகம்

ஓமனில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம், கொடூர சித்திரவதைக்கு ஆளாகி, இரவும் பகலும் கட்டாய வேலை வாங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவரை…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: இந்தியாவில் டெலிகிராம் தற்காலிக தடை

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, மத்திய அரசு இந்தியாவில் டெலிகிராம் செயலியை ஜூன் 22 வரை தற்காலிகமாக முடக்கியுள்ளது. தேர்வு நேர்மையை உறுதி…

1 Min Read
வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லி நகரம்
இந்தியா

வட மாநிலங்களில் கனமழை: டெல்லி வெள்ளத்தில் தத்தளிப்பு

வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகாண்ட், காஷ்மீர், ராஜஸ்தான் மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்மட்டம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?