MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நிதியமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நிதியமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நிதியமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழ்நாடு

நிதியமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 25, 2026 9:49 மணி
Fernandez
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டமன்றத்திலேயே ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதாவது: 'லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும், முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.'

மேலும் அவர், 'லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்போதும் சரி, இப்போதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சன் அவர்களின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சன் அவர்களை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக BNS-இன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் அவர்கள் நீக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அன்பில் மகேஸ்தமிழக அரசுதிமுகநயினார் நாகேந்திரன்பாஜகமரிய வில்சன்லஞ்சம்விசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழ்நாடு முதல்வர் விஜய் புகைப்படம் அலுவலகங்களில் முதல்வர் படம்: ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவு
Next Article நெடுவயல் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்காசி: கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – பொதுமக்கள் தப்பி ஓட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

அதிமுகவுக்கு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ பொருந்தும்: மாணிக்கம் தாகூர்

இரட்டை இலை சின்னத்துடன் டெபாசிட் இழக்கும் அதிமுகவுக்கு 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' பொருந்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த அறிவிப்பு
இந்தியா

இந்திய ஜிடிபி வளர்ச்சி: பாஜக பெருமிதம், காங்கிரஸ் கேள்வி

நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8% வளர்ச்சி அடைந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக இதை பெருமையாகக் கூற, காங்கிரஸ் வேலைவாய்ப்பு குறித்து…

2 Min Read
சாலையை கடக்கும் காட்டு யானைகள் கூட்டம்
தமிழ்நாடு

தொரப்பள்ளியில் சாலையை மறித்த காட்டு யானைகள்: கார் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையை கடக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு கார் சேதமடைந்தது.

1 Min Read
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

வ.உ.சி.யின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: அன்புமணி ராமதாஸ்

வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவிற்குள் நுழைந்த அந்நியர்களை, அதே வணிகத்தின் மூலம் வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடிய வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?