MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாக்யராஜ் புகழ் நிலைத்திருக்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாக்யராஜ் புகழ் நிலைத்திருக்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாக்யராஜ் புகழ் நிலைத்திருக்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

தமிழ்நாடு

பாக்யராஜ் புகழ் நிலைத்திருக்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

Admin
Last updated: ஜூன் 27, 2026 4:59 மணி
Admin
Share
SHARE

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த கே.பாக்யராஜின் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜின் திடீர் மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், 'தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன். வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அவரது இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம். திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரையே சேரும். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும், 'தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும்' என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Cinemaஉதயநிதி ஸ்டாலின்கே. பாக்யராஜ்சினிமா செய்திகள்தமிழ்நாடு அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி
Next Article 15 வயது சிறுவனின் அதிரடி: ஆர்ச்சரின் பந்துவீச்சை துவம்சம் செய்த கதை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்யும் பூசாரி

மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக…

ஆகஸ்ட் 11, 2026

மழைக்காக முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானாவில், பீச்சுப்பள்ளி ஆற்றில் படித்துறைக்கு வந்த முதலைக்கு,…

ஆகஸ்ட் 11, 2026

பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்

சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள்…

ஆகஸ்ட் 11, 2026

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்பட சிஜேபி நாடு தழுவிய பிரச்சாரம்

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 11, 2026

தண்ணீருக்குள் வாழும் 16 வயது சிறுவன்: அரிய நோயால் அவதி

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் இக்பால்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 Min Read
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்: மாணவர்கள் மீது தாக்குதல், மயக்கம்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் மயக்கமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

2 Min Read
தமிழ்நாடு

கடலூர் அருகே கடலில் 4 புதிய எண்ணெய் கிணறுகள்: அனுமதி கோரி விண்ணப்பம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

மனைவியை துன்புறுத்திய இளைஞர் கொடூரக் கொலை: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் மனைவியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் அந்தோணி சேசுராஜ் என்பவர் அவரது மைத்துனர் மற்றும் நண்பர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?