MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி 179 ரன்கள் முன்னிலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி 179 ரன்கள் முன்னிலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி 179 ரன்கள் முன்னிலை

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி 179 ரன்கள் முன்னிலை

Admin
Last updated: மே 11, 2026 7:53 மணி
Admin
Share
SHARE

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை மற்றும் வெளிச்சமின்மையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 179 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, நஜ்முல் ஹொசைனின் (101) சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹிமின் (71) அரைசதத்தால் 413 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் அசான் அவாய்ஸின் (103) சதத்தால் 386 ரன்கள் எடுத்தது. வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

27 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன், முகமது அப்பாஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம், ஹசன் அலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது கைக்கோர்த்த மொமினுல் ஹக் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஜோடி, நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடியது. ஆட்டத்தின் இடையே பாகிஸ்தான் வீரர்கள் விட்ட இரண்டு கேட்ச் வாய்ப்புகளைப் (15 மற்றும் 43 ரன்களில்) பயன்படுத்திக் கொண்ட மொமினுல் ஹக் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் 152 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் மொமினுல் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக வெறும் 49 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. நஜ்முல் ஹொசைன் அரைசதத்துடன் களத்தில் உள்ளார்.

தற்போது 179 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி பாகிஸ்தானுக்குக் கடினமான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article PBKS vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 5 வீரர்கள் மாற்றம்.. டாஸ் வென்ற உடன் எடுத்த முடிவு
Next Article ‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ எடையுள்ள அரிய வகை மீன்…

ஜூலை 31, 2026

ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணும்…

ஜூலை 31, 2026

கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் கனமழை காரணமாக எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட…

ஜூலை 31, 2026

குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: தோல்விக்கு பின் கம்மின்ஸ் பேச்சு – வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டிய ஹைதராபாத் கேப்டன்

2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பாராட்டினார்.…

2 Min Read
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு
விளையாட்டு

சிஎஸ்கே பயிற்சியாளர் மாற்றம்: ஹேமங் பதானி நியமனத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகிய நிலையில், ஹேமங் பதானி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல். இந்த முடிவால் ரசிகர்கள்…

2 Min Read
விளையாட்டு

இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றிக்கு இந்திய அணி எவ்வளவு ரன்கள் குவிக்க வேண்டும்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் 368 ரன்கள் குவித்து இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்னிங்ஸ் வெற்றிக்கு இந்திய அணி எவ்வளவு…

2 Min Read
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல்
விளையாட்டு

இந்தியாவுக்கு புதிய சவால்: இங்கிலாந்து அணியில் ‘ஸ்டார்பாய்’ ஓப்பனிங்?

மான்செஸ்டரில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டிக்கு முன், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என எதிர்பார்ப்பு. இது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?