MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் மருத்துவமனையில் வங்கதேச கேப்டன் மெஹிதி ஹாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் மருத்துவமனையில் வங்கதேச கேப்டன் மெஹிதி ஹாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் மருத்துவமனையில் வங்கதேச கேப்டன் மெஹிதி ஹாசன்

விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் மருத்துவமனையில் வங்கதேச கேப்டன் மெஹிதி ஹாசன்

Admin
Last updated: ஜூன் 12, 2026 9:21 காலை
Admin
Share
SHARE

டாக்கா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தொடரைக் கைப்பற்றிய கையோடு வங்கதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, மெஹிதி ஹாசனின் ஹெல்மெட்டின் பக்கவாட்டில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர், உடனடியாக மைதானத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தார்.

உடனடியாக வங்கதேச அணியின் உடற்பயிற்சி நிபுணர் பேஜெதுல் இஸ்லாம் கான் மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்து முதலுதவி அளித்தனர். அப்போது மெஹிதி ஹாசன் மைதானத்திலேயே வாந்தி எடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்ட நிலையிலும், அவர் அதை மறுத்துவிட்டு மீண்டும் பேட்டிங் செய்ய எழுந்து நின்றார். கடும் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிய கேப்டன் மெஹிதி ஹாசன், ஒரு சிக்சர் அடித்து வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முதன்முறையாக வென்று புதிய சாதனை படைத்தது.

போட்டி முடிந்த பிறகு மெஹிதி ஹாசன் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அணியின் உடற்பயிற்சி நிபுணர் கூறுகையில், அவருக்கு லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் முதலுதவிக்குப் பிறகு அவர் விளையாடினாலும், பாதுகாப்பு கருதி அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக உள்ளார் என்றார்.

கேப்டன் மெஹிதி மருத்துவமனைக்குச் சென்றதால், பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கூறுகையில், 'அவர் நலமாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாக உள்ளது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் காட்டிய தைரியம் தான் வெற்றிக்கு காரணம்' என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BangladeshCricketMehidy Hasanகிரிக்கெட்மெஹிதி ஹாசன்வங்கதேசம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இமயமலைக்கு இரட்டை ஆபத்து: வறட்சி, திடீர் வெள்ளம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Next Article விருச்சிக ராசி: இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புனே காவல் துறையினர் மனிதக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துதல்

போர்ச்சுகல் மதுபானக் கடைக்கு விற்கப்பட்ட நாக்பூர் பெண்: 7 பேர் மீது வழக்கு

நாக்பூர் பெண் போர்ச்சுகல் மதுபானக் கடைக்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை…

ஆகஸ்ட் 8, 2026

டெல்லியில் சொகுசு கார் மோதி 70 வயது மூதாட்டி பலி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு…

ஆகஸ்ட் 8, 2026

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த சுப்மன் கில்
விளையாட்டு

ஐசிசி தரவரிசை: சுப்மன் கில் முதலிடம், வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறியுள்ளார்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
விளையாட்டு

தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்: 17வது ஓவரில் கைநழுவிய வெற்றி!

மான்செஸ்டரில் நடந்த இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். 17வது ஓவரில் கைநழுவிய வெற்றி…

3 Min Read
விளையாட்டு

தோனி வருவாரா? சேப்பாக்கத்தில் CSK-யின் கடைசி போட்டி.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஐபிஎல் 2026 சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வலைப்பயிற்சியில் தீவிரம் காட்டியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

சச்சின் கடவுள், வைபவ் கடவுளின் பிள்ளை: ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சிப் பேட்டி

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது என்றும், சச்சின் கடவுள் என்றால் வைபவ் கடவுளின் பிள்ளை என்றும் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?