MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அக்சர் பட்டேல்: 100 விக்கெட் எடுக்கும் முதல் இந்திய ஸ்பின்னர் ஆகிறாரா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அக்சர் பட்டேல்: 100 விக்கெட் எடுக்கும் முதல் இந்திய ஸ்பின்னர் ஆகிறாரா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - அக்சர் பட்டேல்: 100 விக்கெட் எடுக்கும் முதல் இந்திய ஸ்பின்னர் ஆகிறாரா?

விளையாட்டு

அக்சர் பட்டேல்: 100 விக்கெட் எடுக்கும் முதல் இந்திய ஸ்பின்னர் ஆகிறாரா?

Admin
Last updated: ஜூலை 4, 2026 3:16 மணி
Admin
Share
அக்சர் படேல் பந்து வீசும் காட்சி
அக்சர் படேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் சாதனையை நெருங்கியுள்ளார்.
SHARE

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் அக்சர் படேல் ஒரு விக்கெட் எடுத்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

இந்திய அணியின் துணை கேப்டனாக கூட நியமிக்கப்பட்ட அக்சர் படேல், தற்போது ஒரு சாதாரண வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், இதுவரை 97 டி20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மான்செஸ்டரில் நடைபெறும் இந்த டி20 போட்டியில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தினால், 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெறுவார்.

2024 டி20 உலககோப்பை வெல்லும் பயணத்திலும் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார். இறுதிப் போட்டியில் விராட் கோலியுடன் அவர் இணைந்து உருவாக்கிய பார்ட்னர்ஷிப் வெற்றியின் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியாவின் சார்பில் இதுவரை அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதில் ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார். அவர் 87 போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஜஸ்பிரித் பும்ரா 95 போட்டிகளில் 121 விக்கெட்டுகளுடனும், ஹர்திக் பாண்டியா 138 போட்டிகளில் 114 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து அக்சர் படேல் 97 போட்டிகளில் 99 விக்கெட்டுகளுடனும், யுஸ்வேந்திர சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகளுடனும், குல்தீப் யாதவ் 54 போட்டிகளில் 95 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், புவனேஷ்வர் குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளுடனும், வருண் சக்ரவர்த்தி 46 போட்டிகளில் 73 விக்கெட்டுகளுடனும், ரவிச்சந்திரன் அஷ்வின் 65 போட்டிகளில் 72 விக்கெட்டுகளுடனும் மற்றும் ரவி பிஷ்னோய் 45 போட்டிகளில் 64 விக்கெட்டுகளுடனும் இப்பட்டியலில் முக்கிய இடங்களில் உள்ளனர்.

மேலும், ரவீந்திர ஜடேஜா 74 போட்டிகளில் 54 விக்கெட்டுகளுடனும், வாஷிங்டன் சுந்தர் 61 போட்டிகளில் 51 விக்கெட்டுகளுடனும், யுவராஜ் சிங் 58 போட்டிகளில் 28 விக்கெட்டுகளுடனும் மற்றும் ஹர்பஜன் சிங் 28 போட்டிகளில் 25 விக்கெட்டுகளுடனும் இந்தியாவின் டாப் 10 டி20 ஸ்பின்னர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அக்சர் படேல், ஜூலை 1 அன்று செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடினார். ஆனால், மழையின் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் தடைபட்டதால் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக, 2026 ஜூன் மாதம் பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது போட்டியில் விக்கெட் ஏதுமின்றி ரன்களை கட்டுப்படுத்தினார்.

உலக அளவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 115 போட்டிகளில் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் இஷ் சோதி 142 போட்டிகளில் 165 விக்கெட்டுகளுடனும், இங்கிலாந்தின் அடில் ரஷித் 146 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 98 போட்டிகளில் 161 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 118 போட்டிகளில் 153 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Axar PatelCricket RecordIND vs ENGIndian SpinnerManchesterT20 Cricketஅக்சர் பட்டேல்மான்செஸ்டர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுவை அகற்றும் பணி திருவள்ளூர்: 18 உயிர்களை பறித்த தொழிற்சாலையில் அம்மோனியா அகற்றும் பணி தொடக்கம்
Next Article செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சம்மன் வழங்கப்படுகிறது செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சம்மன்: ஆட்சி கவிழ்ப்பு முயற்சி அம்பலம்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இஷான், சுப்மன் சதம் – 402 ரன்கள் குவிப்பு

இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இஷான் கிஷன், சுப்மன் கில் சதம் அடிக்க, இந்திய அணி 402 ரன்கள் குவித்தது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் அழுத்தத்தை…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல்: 4வது வரிசையில் சதம் அடித்த முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் வரலாற்றில் 4-வது வரிசையில் களமிறங்கி சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தில்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் மானவ் சுதர் பந்து வீசுகிறார்
விளையாட்டு

10 விக்கெட் வீழ்த்தி இலங்கையை சுருட்டிய 24 வயது இந்திய புயல் மானவ் சுதர் !

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 24 வயது இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

இந்தியா vs அயர்லாந்து: 2 அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் என இரண்டு இளம் வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?