MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எங்களை ஏமாற்றினீர்களா? ஏன் ஓட்டுப் போடவில்லை? – அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எங்களை ஏமாற்றினீர்களா? ஏன் ஓட்டுப் போடவில்லை? – அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எங்களை ஏமாற்றினீர்களா? ஏன் ஓட்டுப் போடவில்லை? – அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி

தமிழ்நாடு

எங்களை ஏமாற்றினீர்களா? ஏன் ஓட்டுப் போடவில்லை? – அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 6:57 காலை
Fernandez
Share
அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பேச்சு
திருச்செந்தூரில் நலக்கூடம் திறப்பு விழாவில் பேசிய எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்
SHARE

திருச்செந்தூரில் சமுதாய நலக் கூடம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், வாக்காளர்களை நோக்கி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். "இந்தக் குருகாட்டூர் பகுதியில் எனக்கு 430-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. ஆனால், பாஜகவுக்கு 148 ஓட்டுகளும், த.வெ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 400-க்கும் மேற்பட்ட வாக்குகளும் விழுந்துள்ளது. இது ஏன்? எதற்காக எங்களுக்கு வாக்களிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைவுபடுத்திய அனிதா ராதாகிருஷ்ணன், "உங்களுக்காக அனைத்தையும் செய்த முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை, நமது கனிமொழி எம்பி-யை மறந்து விட்டீர்கள். எனக்கு விழுந்த வாக்குகளை விடக் குறைவான வாக்குகளே கனிமொழிக்கு விழுந்துள்ளது. என்ன காரணத்திற்காக அவருக்கு இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள்?" என்று ஆதங்கப்பட்டார்.

மேலும், பாஜகவுக்கு வாக்களித்ததை விட, ஜோசப் விஜய் என்பவர் முழங்கால் போட்டு நடந்ததற்காக அவருக்கு வாக்களித்தீர்களா என்றும் அவர் கேட்டார். "நாங்கள் உங்களை ஏமாற்றி விட்டோமா? இதை நேரில் கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழை மக்களுக்கு வாரி வழங்கியதை ஒப்பிட்டுப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "தற்போதுள்ள முதல்வர் விஜய் மக்களுக்காக 100 பைசா கூட தனது சொந்த செலவில் செய்திருப்பாரா? திருமணத்திற்கு ஒரு பவுன் நகையும், பட்டு சேலையும் கொடுப்பேன் என்று கூறினாரே, அதை நிறைவேற்ற முடிந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.

"விசிலுக்கு வாக்கு செலுத்தியதால் தற்போது நீங்கள் அனைவரும் இரவில் முழித்து கொண்டே இருக்கிறீர்கள். ஏன் இந்த விசிலுக்கு வாக்கு போட்டோம் என்று மக்கள் கேட்கிறார்கள். போன முறைதான் எங்களை ஏமாற்றினீர்கள். இனி வரும் தேர்தலில் உங்களது ஆதரவைத் தர வேண்டும். எங்களை இந்தப் பாடு படுத்தினால் என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலாவது எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

மேலும், 'இன்னும் சில மாதங்களில் தவெக அரசு கவிழ்ந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார்' என அவர் பேசியுள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக தவெக அரசை அவதூறாக பேசி கைதான அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், மீண்டும் அதே போல பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அனிதா ராதாகிருஷ்ணன்தமிழக அரசியல்தவெகதிமுகதிருச்செந்தூர்தேர்தல்முதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஜூஸ் வகைகள் நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம்: எந்த ஜூஸ் குடிக்கலாம்?
Next Article இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளிக்கிறார் வாடகை வீட்டில் வசிக்கிறோம்; 2 கோடி சொத்து வாங்க முடியாது – அமைச்சர் ரமேஷ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம்

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்திக்கு கர்நாடக மாநில…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக விளக்கம்

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று…

ஜூலை 31, 2026

வயநாடு நிலச்சரிவு: 2 ஆண்டுகள் நிறைவு – உறவினர்கள் அஞ்சலி

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த…

ஜூலை 31, 2026

காமகோடி சர்ச்சை பேச்சு: பிரியங்கா காந்திக்கு கல்வியாளர்கள் கண்டனம்

ஐஐடி உயர் கல்வி நிறுவன இயக்குநர் காமகோடியை…

ஜூலை 31, 2026

You Might Also Like

இந்தியா

உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

தேர்தல் தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான விற்பனை மீது குண்டர்…

1 Min Read
நாகர்கோவில் சிறை வாசலில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணைக்கு தயாராகும் காட்சி
தமிழ்நாடு

நாகர்கோவில் சிறைக் கைதி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கைதியின் மரணத்தில் புதிய திருப்பத்தை…

2 Min Read
முதலமைச்சர் விஜயை சந்திக்கும் பாடகர் தெருக்குரல் அறிவு
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை சந்தித்த பாடகர் தெருக்குரல் அறிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை பாடிய ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமாக இருக்கக்கூடாது – வானதி சீனிவாசன்

ஆண்டுதோறும் நிதி நிலை மற்றும் கடன் சுமையை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?