MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு: அன்புமணி எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு: அன்புமணி எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு: அன்புமணி எச்சரிக்கை

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு: அன்புமணி எச்சரிக்கை

Fernandez
Last updated: அக்டோபர் 13, 2026 12:38 மணி
Fernandez
Share
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
SHARE

தமிழக மின்சார வாரியம் வெளிச்சந்தையில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: "தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ. 35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இன்றைய சூழலில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றாலும்கூட, இதே நிலை நீடித்தால் நிலைமையை சமாளிக்க முடியாது என்பதால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், அதைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்த தனியார் மின் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 31.99 முதல் ரூ. 37 வரை, அதாவது சராசரியாக ரூ. 35 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இதுவரை இல்லாத உச்சமாகும்.

சில வாரங்களுக்கு முன்பே முயன்றிருந்தால் இதை விட குறைந்த விலையில் மின்சாரம் வாங்கியிருக்க முடியும். ஆனாலும், நாடு முழுவதும் மின்சாரத்தின் தேவை சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தவிர மின்வாரியத்திற்கு வேறு வழியே இல்லை என்று கூறப்படுகிறது. இது தற்காலிக ஏற்பாடுதான் என்றாலும், இதே நிலை மேலும் பல மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில் மின்சார வாரியம் சந்திக்கவிருக்கும் இழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.

ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 1000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த முடியும். அதன்படி, 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 45 லட்சம் யூனிட் மின்சாரத்தையும், ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 10.80 கோடி யூனிட் மின்சாரத்தையும் பயன்படுத்த முடியும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ. 7 என்ற விலைக்கு மட்டுமே மின்சார வாரியம் விற்பனை செய்கிறது.

தமிழக அரசால் இலவச மின்சாரத்திற்கான மானியம் மற்றும் இழப்பீடாக ஆண்டுக்கு சுமார் ரூ. 32 ஆயிரம் கோடி வழங்கப்படும் நிலையில், அதையும் சேர்த்தால் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான விலையாக மின்வாரியத்திற்கு ரூ. 10.32 மட்டுமே கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35க்கு வாங்கி, ரூ. 10.32க்கு விற்பனை செய்தால் ரூ. 24.68 இழப்பு ஏற்படும். ஒரு நாளைக்கு 10.80 கோடி யூனிட்டுகளுக்கு ரூ. 266.54 கோடி இழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ரூ. 97,288.56 கோடி இழப்பு ஏற்படும். இது இப்போது கூடுதலாக வாங்கப்படும் மின்சாரத்தின் மூலம் ஏற்படும் இழப்பு மட்டுமே.

மேலும், 15% மின்சார இழப்பு, வேறு ஆதாரங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் இழப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த இழப்பு ரூ. 1.20 லட்சம் கோடியைத் தாண்டும். மின்சார வாரியம் ஏற்கெனவே ரூ. 2.47 லட்சம் கோடி கடனுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 10,000 கோடிக்கும் கூடுதலாக மின்வாரியம் செலுத்துகிறது.

அதிக விலைக்கு 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் கூடுதலான இழப்பையும் சேர்த்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் ஓராண்டுக்குகூட செயல்பட முடியாமல் முடங்கி விடும் அல்லது மின்சாரக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவை இரண்டுமே மின்சார வாரியத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.

தமிழகம் இப்படி ஒரு நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு காரணம், மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அனல் மின்திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாததுதான். தமிழ்நாட்டின் சராசரி மின்தேவை 22,000 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், அதில் மின்வாரியம் அதன் சொந்த அனல் மின் நிலையங்கள் மூலம் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 3216 மெகாவாட் மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளில் 2900 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் மட்டுமே கடந்த ஜனவரி மாதத்தில்தான் வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தியை தொடங்கியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட 1320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள் 95% அளவுக்கும், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் 75% அளவுக்கும் மட்டுமே நிறைவடைந்துள்ளன. உப்பூரில் 1600 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் 35% முடிவடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

இவை தவிர இன்னும் 12 ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலான திறன் கொண்ட அனல் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அவற்றில் உடன்குடி தலா 1320 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் திட்டங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கு பெயரளவில் மட்டும் சில அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தவிர மீதமுள்ள அனல் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 12% முதல் 15% வரை அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சொந்த மின்னுற்பத்தித் திறனை அதிகரிக்காவிட்டால், இதேபோல் அதிக விலை கொடுத்து தான் மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். இதை உணர்ந்து தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் 4900 மெகாவாட் அனல் மின் திட்டங்களையும், அறிவிக்கப் பட்டு எந்தப் பணியும் தொடங்கப்படாமல் இருக்கும் 3240 மெகாவாட் அனல் மின் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். இந்த மின்திட்டங்களின் முன்னேற்றத்தையும், அவை எப்போது முடியும் என்பதையும் மக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக இந்தத் திட்டங்களின் செயலாக்க முன்னேற்றம் குறித்த கால அட்டவணையை மின்சார வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anbumani RamadossTamil Nadu Electricity Boardஅன்புமணி ராமதாஸ்தமிழ்நாடு மின்சார வாரியம்பாமகமின்சார இழப்புமின்பற்றாக்குறைமின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?
Next Article டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைக் குறிக்கும் அறிவிப்பு பலகை டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் மாங்ரோல் கப்பல் இணைக்கப்படும் காட்சி

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் மாங்ரோல் நீர்மூழ்கி வேவுக்கப்பல்

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்ட 'ஐஎன்எஸ்…

அக்டோபர் 13, 2026

பஞ்சாபில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: இறுதிப் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி…

அக்டோபர் 13, 2026

டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த…

அக்டோபர் 13, 2026

பரூச் ஜாமியா மசூதி: சமண கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பரூச்​ ஜாமியா மசூதி, சமணக் கோயிலாக…

அக்டோபர் 13, 2026

டெல்லி போராட்டங்களுக்கு மத்தியில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பிறகு, 'மக்கி…

அக்டோபர் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: டிரைவர் கைது

நடிகர் ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் அவருடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு

அதிமுகவில் தினகரன் ரீ-என்ட்ரி: பழனிசாமிக்கு நிர்வாகிகள் கோரிக்கை

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இது அவசியம் என நிர்வாகிகள்…

2 Min Read
கோவிலில் முன்னோர்களுக்காக அர்ச்சனை செய்யும் பக்தர்கள்
தமிழ்நாடு

இறந்தோர் பெயரில் அர்ச்சனை: சிறப்பு வாய்ந்த 7 கோவில்கள்!

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்கள் மோட்சம் பெறவும் அவர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்யப்படும் சிறப்பு வாய்ந்த 7 கோவில்கள் பற்றிய ஆன்மீக மரபு.

3 Min Read
உயர்ந்த விலையில் விற்பனை செய்யப்படும் எலுமிச்சம் பழங்கள்
தமிழ்நாடு

வெப்பத்தால் எகிறிய எலுமிச்சை விலை: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், எலுமிச்சம் பழத்தின் தேவை உயர்ந்துள்ளது. இதனால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?