அமைச்சர் அன்பில் மகேஷின் நண்பருக்கு சம்மன்: ரூ.100 கோடி மோசடி வழக்கு

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் நண்பரான வாளாடி கார்த்திக்கிற்கு சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் கார்த்திக் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய பி.டி.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான இடங்களில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, அன்பில் மகேஷின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை நடைபெற்று வரும் சூழலில், இந்த மோசடி வழக்கில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படும் அவரது நண்பர் வாளாடி கார்த்திக்கிற்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 100 கோடி ரூபாய் மோசடி சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version