இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் இந்த துறையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், Ampere நிறுவனத்தின் முக்கிய மின்சார ஸ்கூட்டராக Ampere Magnus திகழ்கிறது. தற்போது இந்த ஸ்கூட்டரின் ஒரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூபாய் 93 ஆயிரத்து 468 ஆகும். இந்த Ampere Magnus ஸ்கூட்டர் நீலம், சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் வான் நீலம் போன்ற வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
இந்த மின்சார ஸ்கூட்டர் வெறும் 6.5 நொடிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இது லோ மற்றும் ஹை ரைட் மோட்களில் இயங்கக்கூடியது. இதில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரி LFP தொழில்நுட்பத்துடன், போர்ட்டபிள் பேட்டரி வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
Ampere Magnus ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் ஆகும். ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் ட்ரம் பிரேக்குகள் உள்ளன. ஸ்டீல் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்புறம் 12 இன்ச் மற்றும் பின்புறம் 10 இன்ச் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்களுடன் வருகின்றன.
மேலும், இந்த ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் டியூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 104 கிலோ ஆகும். 156 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன், 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரிக்கு 5 வருட வாரண்டியும், மோட்டாருக்கு 3 வருட வாரண்டியும் Ampere நிறுவனம் வழங்குகிறது.
Ampere Magnus ஸ்கூட்டரில் 3.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ஆகியவை டிஜிட்டல் முறையில் காண்பிக்கப்படும். டிஸ்டன்ஸ் டு எம்டி (Distance to Empty) வசதி, டிஜிட்டல் ட்ரிப்மீட்டர், ஸ்டாண்ட் அலாரம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் மற்றும் ஹை பீம் இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.
இந்த ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இல்லை என்றாலும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சைட் ஸ்டாண்ட் இன்ஜின்/மோட்டார் கட்-ஆஃப், செல்ஃப் ஸ்டார்ட், ரிவர்ஸ் மோட் மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற நவீன வசதிகளும் இதில் உள்ளன. மேலும், எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் எல்இடி சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 22 லிட்டர் டிக்கி வசதி மற்றும் பில்லியன் சீட் வசதியும் இதில் உள்ளது.

