அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப் பேர் கிராமத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 74 வடமாநில தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்து சில நாட்களுக்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை 9 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த சுபாசி ஜூவாங்ஸ் (வயது 24) உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆனது. உயிரிழந்தவர்களில் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளும் அடங்குவர்.

தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த ரீட்டா ஜூவாங்கா (வயது 28) சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. தற்போது மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்கள் குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version