அமித் ஷாவை சந்தித்த ஆளுநர் அர்லேகர்: முக்கிய ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லியில் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு மாநிலங்களின் நிர்வாகச் செயல்பாடுகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது மற்றும் இதில் குதிரை பேரம் நடைபெறுவதாக எழுந்த புகார்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று தெரிவித்திருந்த நிலையில், துணைவேந்தர் நியமனம் குறித்தும் ஆளுநர் அர்லேகர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இதனிடையே, தமிழ்நாடு அரசு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரணை நடத்த ஆளுநரிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த விவகாரம் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு, இரு மாநிலங்களின் முக்கிய நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆளுநர் அர்லேகரின் இந்த திடீர் டெல்லி பயணம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version