திமுகவில் இணைகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? அரசியல் களத்தில் பரபரப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முக்கிய நிர்வாகியுமான ஆளூர் ஷாநவாஸ், விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு, கூட்டணி மாற்றங்கள் மற்றும் கட்சி தாவல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த தகவல் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. நீண்ட காலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த ஷாநவாஸ், அக்கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இருப்பினும், 2026 தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்ததாக கூறப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவருக்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், அவர் முழுமையான திருப்தி அடையவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையில், விசிக முன்னாள் நிர்வாகி பனையூர் பாபு திமுகவில் இணைந்த நிலையில், தற்போது ஷாநவாஸ் பெயரும் அதே திசையில் இணைக்கப்படுவது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளகியுள்ளது.

மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் அண்மையில் சந்தித்ததாகக் கூறப்படும் தகவல்கள், இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version