நடிகர் அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்பட டிரெய்லர் வெளியீடு!

நடிகர் அஜித்குமார் அவர்களின் 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு.

நடிகர் அஜித்குமார் அவர்களின் நீண்ட நாள் கனவான 'கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், கார் பந்தயத்தை மையமாகக் கொண்டது.

குறிப்பிட்ட திரையரங்குகளில் நடைபெற்ற இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோர் கலந்துகொண்டு ரசிகர்களுடன் சேர்ந்து டிரெய்லரைக் கண்டு ரசித்தனர். படத்தைத் தயாரித்தவர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறுகையில், 'கார் பந்தயத்தை மையமாகக் கொண்ட இந்தப் படம், நடிகர் அஜித்குமாரின் சிறுவயது கனவுத் திட்டமாகும். பந்தயக் களத்தில் நடக்கும் உண்மையான தருணங்களை எந்தவிதமான புனைவும் இன்றி நேரடியாகப் பதிவு செய்துள்ளோம். களத்தில் அஜித்தின் உழைப்பு பிரமிக்க வைத்தது. திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து டிரெய்லரைப் பார்த்தது ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். சிறுவயதில் நாம் செய்யத் தவறிய அல்லது விட்டுச் சென்ற விஷயங்களைத் தேடி அலைவதுதான் மனித வாழ்க்கை. இந்த ஆவணப்படமும் அதுபோன்ற ஒரு கதைக் களத்தைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அஜித் குமாருக்கு மோட்டார் ரேஸ் மீதான ஆர்வம் நேற்று, இன்று வந்ததல்ல; அது அவரது சிறுவயதுக் கனவு. நீண்டகாலமாக அவருக்குள் மறைந்திருந்த அந்தத் தீவிர ஆசை சமீபகாலமாகத்தான் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியுள்ளது' என்றும் அவர் விளக்கினார்.

வெளியான டிரெய்லரில், அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, மனைவி ஷாலினி, மகள் அனக்ஷா, மகன் ஆத்விக் ஆகியோர் அஜித் குமாரின் ரேசிங் ஆர்வம் குறித்துப் பேசுகின்றனர். குறிப்பாக, அஜித் குமாரின் மனைவி ஷாலினி பேசும்போது, 'வெற்றி என்பது ஒரு இரவில் வராது; அதனை அஜித் எப்போதும் விரும்பவும் மாட்டார். ஒவ்வொரு முறை அஜித் கார் பந்தயத்தில் ஈடுபடும் பொழுதும் மனைவியாக எனக்கு மிகப் பெரிய அளவு பதைபதைப்பு இருக்கும். இருப்பினும் அவருடைய ஆசை, விருப்பம் அனைத்தும் கார் பந்தயமாக இருப்பதால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்' என்று தெரிவித்தார்.

இந்தப் படம், அஜித் குமாரின் கார் பந்தய ஆர்வம் மற்றும் அதற்காக அவர் மேற்கொள்ளும் கடின உழைப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது. அவரது குடும்பத்தினரின் பார்வையில் அவரது கனவை நோக்கிய பயணமும் இதில் இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version