MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்கள் தேவை: ரஹானே கருத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்கள் தேவை: ரஹானே கருத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்கள் தேவை: ரஹானே கருத்து

விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்கள் தேவை: ரஹானே கருத்து

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 6, 2026 10:24 காலை
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரஹானே
இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரஹானே
SHARE

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அணியின் தற்போதைய நிலை குறித்து இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் மூத்த வீரர்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டில், இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் 0-3 என்ற கணக்கிலும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 0-2 என்ற கணக்கிலும் படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ரஹானே, 'ஒரு டெஸ்ட் அணிக்கு 7 முதல் 8 மூத்த வீரர்களின் அனுபவமும், 2 அல்லது 3 இளம் வீரர்களின் ஆற்றலும் அவசியம். ஆனால் தற்போது இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் புதியவர்களாகவே உள்ளனர். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களே அணியில் இல்லை. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல' என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய ரஹானே, 'டெஸ்ட் கிரிக்கெட் அழியாமல் இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கவனித்தவரை, மூத்த வீரர்களைத் தக்கவைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணியில் உள்ள அனைத்து மூத்த வீரர்களும் ஒரே நேரத்தில் அணியை விட்டு வெளியேறியதே தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது' என்று அவர் கூறினார்.

மேலும், டெஸ்ட் போட்டியின் சவால்கள் குறித்துப் பேசிய ரஹானே, 'கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வீட்டில் அமர்ந்து இந்திய அணி சொந்த மண்ணிலேயே போட்டிகளைத் தோற்பதைப் பார்த்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மன வலிமையும், சவாலான சூழலை எதிர்கொள்ளும் திறனும் மிகவும் முக்கியம். கடினமான செஷன்களை பொறுமையாகக் கடந்து விளையாட வேண்டும். நான் எந்த அணியின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் தற்போதைய அணிகளில் அந்தப் பொறுமை இல்லை' என்று குறிப்பிட்டார்.

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய நிலைக்கு மூத்த வீரர்களின் அனுபவமின்மையே காரணம் என ரஹானே சுட்டிக்காட்டியுள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவினரும், பயிற்சியாளரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் அதே வேளையில், அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய டெஸ்ட் அணி எதிர்காலங்களில் சிறப்பாக செயல்பட, அனுபவம் மற்றும் இளமையின் சரியான கலவை கொண்ட அணி அமைய வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேர்வுக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ajinkya RahaneGautam GambhirIndian Test TeamTest Cricketஅஜின்கியா ரஹானேஇந்திய டெஸ்ட் அணிகௌதம் கம்பீர்டெஸ்ட் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயணச்சீட்டுடன் இருக்கும் மாணவி பயணச்சீட்டு எழுத்துகள் அழிதல்: மாணவிக்கு ரூ.510 அபராதம்!
Next Article கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி மேகதாது அணை: தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை – கர்நாடக மந்திரி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த செய்திகளால் மக்கள் மனதில் எழுந்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக…

செப்டம்பர் 25, 2026

மேக் இன் இந்தியா 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் 'மேக் இன்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய வீராங்கனைகள்
விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை: ஷஃபாலி வர்மாவின் அதிரடி சதம், புதிய உலக சாதனை

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 129…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்
விளையாட்டு

ரிஷப் பண்ட்டின் காயம்: 4வது நாள் ஆட்டத்தில் விளையாடுவாரா? பயிற்சியாளர் கவலை

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட்டின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால், அவர் 4வது நாள் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. பயிற்சியாளர் மோர்கல் அவரது உடல்நிலையை…

2 Min Read
விளையாட்டு

அபிஷேக் சர்மா: டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்திய வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 785 பந்துகளில் இந்த…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

ரோஹித் சர்மா சொதப்பல்: ஒருநாள் அணியில் இடம் கேள்விக்குறி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஒருநாள் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது. 2027 உலகக்கோப்பைக்கு முன் ரன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?