MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐசரி கணேஷ் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐசரி கணேஷ் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஐசரி கணேஷ் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு

ஐசரி கணேஷ் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 3:34 மணி
Fernandez
Share
சென்னை உயர் நீதிமன்ற வளாகம்
சென்னை உயர் நீதிமன்றம்
SHARE

சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஐசரி கணேஷுக்கு சொந்தமான திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

அமலாக்கத் துறை பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவர் பாலாஜிநாத் என்பவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணையில் வழக்கு தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை முடித்து வைத்து அறிக்கை அளித்துள்ளதாக ஐசரி கணேஷ் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனது மனுவில் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் இதுவரை ஏற்றுக் கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, இந்த வழக்கை தாக்கல் செய்யுங்கள் என ஐசரி கணேஷுக்கு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட தனது மனுவை வாபஸ் பெறுவதாக ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AmalakkuthuraiC.VijayabaskarDVACMadras High Courtஐசரி கணேஷ்சி.விஜயபாஸ்கர்சென்னை உயர் நீதிமன்றம்லஞ்ச ஒழிப்புத் துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கொடிகள் மற்றும் வர்த்தக சின்னங்கள் இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் நாளை முதல் அமல்: ரூ.60 ஆயிரம் கோடி வர்த்தக உயர்வு எதிர்பார்ப்பு
Next Article நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் பேசும் காட்சி தொடர் தோல்விகளுக்கு கதாநாயகிகளே காரணம் இல்லை: பாக்யஸ்ரீ போர்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள அரசு இணையதளம் முடக்கம் தொடர்பான விசாரணை

கேரள அரசு இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை?

கேரள அரசின் பொதுநிர்வாகத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அரசு தரவுகள் திருடப்பட்டதா…

செப்டம்பர் 27, 2026

டிராய் புதிய அறிவிப்பு: இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் கட்டாயம்!

டிராய் புதிய அறிவிப்பு: இனி வாடிக்கையாளர்கள் 30…

செப்டம்பர் 27, 2026

பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை – அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி மீது இதுவரை யாரும்…

செப்டம்பர் 27, 2026

சாலை தரம் கேட்ட இளைஞரை பாஜக மந்திரி அறைந்த வீடியோ வைரல்

டெல்லி திலக் நகரில் சாலை தரம் குறித்து…

செப்டம்பர் 27, 2026

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசுக்கு முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்துகளை…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

குற்றால அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்
தமிழ்நாடு

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: 2 நாட்கள் விடுமுறை எதிரொலி

இரண்டு நாட்கள் விடுமுறை காரணமாக, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். வார இறுதி நாட்களை ஒட்டி ஏற்பட்ட இந்த விடுமுறை,…

1 Min Read
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெறும் காட்சி
தமிழ்நாடு

கடலூரில் திருநங்கை காதல் திருமணம்: நெகிழ்ச்சியில் மக்கள்

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆவணி மாத முகூர்த்தத்தை முன்னிட்டு 84 திருமணங்கள் நடைபெற்றன. இதில் திருநங்கை ஒருவர் தனது காதலனை கரம்பிடித்தார்.

2 Min Read
ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்
தமிழ்நாடு

எழும்பூர் – விழுப்புரம் ரெயில் பாதையில் பராமரிப்பு: ரயில்கள் மாற்றம்

எழும்பூர் - விழுப்புரம் ரயில் பாதையில் பேரணி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 Min Read
மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி
தமிழ்நாடு

நேர்மையான அதிகாரிகளை நீக்கும் தவெக அரசு: ஜோதி நிர்மலாசாமியின் பதவி விலகல்?

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியை பதவி விலகக் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இது அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகளுக்கு எதிரானது என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?