MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ
தமிழ்நாடு

அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ

Admin
Last updated: May 11, 2026 7:17 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ் (5), இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் (4), விசிக (2), ஐயுஎம்எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. விஜய் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பிறகு, பெரியார் திடலுக்கு சென்று பெரியார மறைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று சட்டசபையில் வெற்றி பெற்றவர்கள் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிறகட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

மு.க. ஸ்டாலினை தொடர்ந்து வை.கோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்தார். நாளை வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார். அண்ணா முதல்வராக பதவி ஏற்றதும், காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அதன்பிறகு, முதலமைச்சராக பதவி ஏற்றவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்தது கிடையாது.

தற்போது சுமார் 59 வருடத்திற்குப் பிறகு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜய் மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

விஜயின் இந்த செயலை விசிக, இந்திய கம்யூனிஸ்டு பாராட்டியுள்ளது.

விஜயின் இந்த சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில் “தி.மு.க. கூட்டணி தலைவர்களிடம் வாழ்த்துகளை பெறும் முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்” என பாராட்டியுள்ளார். மேலும், அரத்தழுவி வரவேற்ற மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள். அனைத்து கட்சி தலைவர்களையும் விஜய் சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ் வரவேற்கிறது என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை
Next Article ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பிறந்தநாள் பரிசு: போலீஸ் உடை அணிந்த இளம்பெண்!

பிறந்தநாளை முன்னிட்டு, போலீஸ் சீருடை அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஒரு இளம்பெண். அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

1 Min Read
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. 28% ஜி.எஸ்.டி. வரியும்…

1 Min Read
தமிழ்நாடு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: தேனி மாவட்டத்துக்கு 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை

தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: இளைஞர் கைது

சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?