MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக துணைப் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுக துணைப் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!

தமிழ்நாடு

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!

Admin
Last updated: ஜூன் 26, 2026 8:04 காலை
Admin
Share
SHARE

அதிமுகவில் உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எஸ்.பி. வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக துணை பொதுச் செயலாளராக நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கழகத் தலைமை நிலைய செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். கழக அமைப்புச் செயலாளர்களாக தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, கோ. அரி, கிருஷ்ணமுரளி, மருதராஜ், பி சௌந்தர்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள், அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த சூழலில், அதிமுக தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கினர். மேலும், தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, அந்த எம்எல்ஏக்களை அவர்கள் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கி வைத்தார். தொடர்ந்து, எடப்பாடி அணி, எஸ்பி வேலுமணி அணி என இரு அணிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களை வெளிப்படுத்தினர். இருப்பினும், கட்சியின் நலன் கருதி இரு துருவங்களாக இருந்து வந்த இரண்டு அணியினரும் மீண்டும் ஒரே அணியாக செயல்பட துவங்கினர்.

ஓரணியாக செயல்பட துவங்கிய பின்னரும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எஸ்பி வேலுமணிக்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. மேலும், எஸ்.பி. வேலுமணியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்காததால் அரசியல் ரீதியாக அது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மேலும், மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ என்ற கருத்தும் பரவி வந்தது. இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது எஸ்.பி. வேலுமணிக்கு புதிய பொறுப்பை வழங்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வழங்கியுள்ளார். அதேபோல், முன்னாள் அமைச்சர் காமராஜ், தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிஎஸ்.பி.வேலுமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா vs அயர்லாந்து: வைபவ் அறிமுகம்? அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வா?
Next Article அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோயில்களின் ரூ.20,000 கோடி உபரி நிதி: தவெக அரசு விசாரணை தீவிரம்

கோயில்களின் உபரி நிதி ரூ.20,000 கோடி என்ன ஆனது என்பது குறித்து தவெக அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் கட்டட பணிகளுக்கு செலவிடப்பட்டதாகக்…

1 Min Read
தமிழ்நாடு

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ்: கண் தானம் செய்து நெகிழ வைத்த செயல்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ், தனது கண்களை தானம் செய்து, மரணத்திற்குப் பிறகும் பிறருக்கு வாழ்வளிக்கும் உன்னத செயலைச் செய்துள்ளார். அவரது இந்த செயல் பரவலான பாராட்டுக்களைப்…

1 Min Read
தமிழ்நாடு

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து!

ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் எரிசக்தி கட்டமைப்பில் இது பெரும்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் நாளை!

தமிழக வளர்ச்சி கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் அவசரக் கூட்டம் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?