MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 12, 2026 7:22 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை கண்டித்து, விழுப்புரத்தில் வரும் 19ஆம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்றும் வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், 'கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000/-த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்' என அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு.

மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 19.6.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. பசுபதி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விவசாயப் பெருங்குடி மக்கள் நலனையும், பொதுமக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMK Protestஅதிமுகஆர்ப்பாட்டம்தவெகமின்வெட்டுவிவசாயிகள் கடன் தள்ளுபடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாகிஸ்தானில் அதிர்ச்சி: 7 கோடி பேர் ஏழைகள், 6 ஆண்டுகளில் 7% உயர்வு
Next Article தாம்பரம் – போடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொல்கத்தா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தினர் உட்பட 9 பேர்…

ஆகஸ்ட் 20, 2026

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை: பாஜகவில் இருந்து விலகிய தேசிய செய்தித் தொடர்பாளர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத், வீட்டு…

ஆகஸ்ட் 20, 2026

பிரதமர் மோடி அமைச்சரவை மாற்றம்: திமுகவுக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில்…

ஆகஸ்ட் 20, 2026

டெல்லியில் எரிவாயு மையத்தில் வெடிவிபத்து: 3 பேர் பலி

டெல்லியில் எரிவாயு மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

புனே இனிப்பு கடை மீது நடவடிக்கை சரியே: உணவு பாதுகாப்பு ஆணையர்

புனே இனிப்பு கடை மீது உணவுப் பாதுகாப்பு…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தபோது எடுக்கப்பட்ட படம்
தமிழ்நாடு

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு: முதலமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம், ஓட்டுநர், எரிபொருள், பராமரிப்பு செலவுகள் மற்றும் உதவியாளர் நியமனத்திற்கு அரசு நிதி உதவி வழங்கும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் அதிர்ச்சியில் இருக்கிறார்: நயினார் நாகேந்திரன் பேச்சு

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தது எப்படி என்ற அதிர்ச்சியில் இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஹபீபி: காதல் Vs சமூக கட்டுப்பாடு – விமர்சனம்

கிராமத்து இயற்கை அழகை மையமாக வைத்து, தமிழ் முஸ்லிம் இளைஞர்-இளம்பெண் எதிர்கொள்ளும் காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை சித்தரிக்கும் 'ஹபீபி' திரைப்பட விமர்சனம்.

1 Min Read
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
தமிழ்நாடு

குதிரை பேரம் உண்மையானால் ஆளுநர் தலையிட வேண்டும் – திருமாவளவன்

அதிமுகவில் நடக்கும் குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானால், ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?