மும்பையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷிமீரா போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிரா-பயந்தர் சாலையில் அமைந்துள்ள அந்த ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக, வாடிக்கையாளர்கள் போல் மாறுவேடமிட்டு ஓட்டலுக்குள் நுழைந்த போலீசார், பணத்தைப் பெற்றுக்கொண்டு நடிகையை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற பெண் புரோக்கரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டல் அறைகளில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 35 வயதுடைய நடிகை ஒருவரை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படும் ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த தபசும் (39) என்ற பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட தபசும் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காஷிமீரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபசார கும்பலில் தொடர்புடையதாகக் கூறப்படும் தபசும்மின் ஆண் கூட்டாளி ஒருவன் தற்போது தலைமறைவாகியுள்ளான். அவனைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
