மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூ, தமிழில் 'டியூட்', 'கர' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது, தளபதி விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்திலும், நடிகர் சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார். தனது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் குறித்து அவர் சமீபத்தில் பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, "என்னுடைய ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் படங்களை வழங்க வேண்டும் என்பதே எனது முக்கிய லட்சியம். அந்த வகையில், சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க விரும்புகிறேன்" என்று தனது கனவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் மனம் திறந்து பேசினார். "ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்குவதே எனது மற்றொரு பெரிய லட்சியம். எதிர்காலத்தில் எனது கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, அது உண்மையான மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் ஆழ்ந்த திருப்தியால் நிறைந்திருக்க வேண்டும். எனது இந்தப் பயணத்தை அந்த இலக்கை நோக்கியே அமைத்துள்ளேன்" என்று அவர் உருக்கமாகக் கூறினார்.
மமிதா பைஜூவின் இந்தக் கருத்துக்கள், அவரது திரைப்பயணத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ரசிகர்களின் அன்பையும், ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையையும் ஒருங்கே பெற அவர் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.