MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடும் 29 வயது ஸ்டார் பவுலர் ஆவேஷ் கான்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடும் 29 வயது ஸ்டார் பவுலர் ஆவேஷ் கான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடும் 29 வயது ஸ்டார் பவுலர் ஆவேஷ் கான்

விளையாட்டு

மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடும் 29 வயது ஸ்டார் பவுலர் ஆவேஷ் கான்

Admin
Last updated: ஜூன் 30, 2026 10:34 காலை
Admin
Share
SHARE

இந்திய அணியில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் மீண்டும் தேசிய அணிக்குள் நுழைவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 2022-இல் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான 29 வயதான இவர், இதுவரை 25 டி20 மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். நல்ல உயரம், பந்துகளை ஸ்விங் செய்யும் திறன், இறுதி ஓவர்களில் யாக்கர் என அனைத்து திறனும் கொண்ட ஆவேஷ் கானுக்கு நவம்பர் 2024-க்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலக நேரிட்டது. இருப்பினும், அடுத்த தலைமுறை வீரர்களின் வருகைக்கு மத்தியிலும், தேர்வுக்குழுவின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான நம்பிக்கையை ஆவேஷ் கான் இழக்கவில்லை.

உள்நாட்டு போட்டிகள் தொடங்கும்போது, எனது முழு கவனமும் சிறப்பாக பந்துவீசி, மத்திய பிரதேச அணி போட்டிகளையும் சாம்பியன் பட்டங்களையும் வெல்ல உதவுவதில்தான் இருக்கும். அங்கு நான் வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டம் மீண்டும் என்னை சர்வதேச அளவில் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச பிரீமியர் லீக் (MPL) தொடரின் மூன்றாவது சீசனில், சம்பல் கரியால்ஸ் அணிக்காக விளையாடி ஆவேஷ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 21.76 சராசரியுடன் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தனது அணி சாம்பியன் கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

இளைய தலைமுறை வீரர்களுக்கு எம்பிஎல் தொடர் ஒரு சிறந்த தளம் என்று குறிப்பிட்ட அவர், ரஞ்சிக் கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை மற்றும் ஐபிஎல் போன்ற பெரிய லீக்குகளுக்குச் செல்வதற்கு இத்தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஒரு சீனியர் வீரராக, இளம் வீரர்களுக்கு ஆட்டத்தின் மனரீதியான அணுகுமுறை மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார். ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 விக்கெட்டுகளை ஆவேஷ் கான் எடுத்திருந்தார். இது குறித்துப் பேசிய அவர், காயங்கள் ஏதும் தமக்கு தடையாக இருக்கவில்லை என்றும், அணியில் வலுவான வேகப்பந்து வீச்சு குழு இருந்ததால் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும், லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் குறித்துப் பேசிய அவர், அவரது தலைமையில் விளையாடியது ஒரு சிறந்த அனுபவம். அவர் பந்துவீச்சாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த முழு ஆதரவை வழங்கக்கூடிய ஒரு சிறந்த கேப்டன் என்று பாராட்டினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணுடன் பணியாற்றியது குறித்துப் பேசிய ஆவேஷ் கான், எம்பிஎல் தொடருக்குப் பிறகு சென்னைக்குச் சென்று அவரது அகாடமியில் பந்துவீச்சுப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் ரஞ்சிக் கோப்பைத் தொடரை இலக்காகக் கொண்டு, தனது உடற்தகுதியையும் பந்துவீச்சையும் மேம்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதையே தற்போதைய நோக்கமாகக் கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Aavesh KhanMPLஆவேஷ் கான்இந்திய அணிகிரிக்கெட்வேகப்பந்து வீச்சாளர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2160 குறைவு!
Next Article இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி: கிரெட்டா முதலிடம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே பாரத் ரயில்

பிரேக் செயலிழந்தும் 463 கி.மீ. ஓடிய வந்தே பாரத் ரயில்: விசாரணை தீவிரம்

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ. தூரம் பயணித்த வந்தே பாரத்…

நவம்பர் 16, 2026

டேட்டிங் செயலி காதல்: கனடா பெண் இந்தியா வருகை

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை திருமணம்…

நவம்பர் 16, 2026

பசியின் கோரம்: நாயிறைச்சியை உண்ட இளைஞர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்த நாயின்…

நவம்பர் 15, 2026

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
விளையாட்டு

ஆசிய கோப்பை சர்ச்சை: பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்

2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும், பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப்…

2 Min Read
மழையால் கைவிடப்பட்ட டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டி மைதானம்
விளையாட்டு

மழையால் டிஎன்பிஎல் எலிமினேட்டர் கைவிடப்பட்டது; கோவை கிங்ஸ் முன்னேற்றம்

டிஎன்பிஎல் 2026 எலிமினேட்டர் போட்டி மழையால் கைவிடப்பட்டது. விடா கோவை கிங்ஸ் அணி சிறந்த ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது.

2 Min Read
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்
விளையாட்டு

WTC புள்ளிப்பட்டியல்: பாகிஸ்தான் முன்னேற்றம், இந்தியா 5வது இடம்

WTC புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திலிருந்து முன்னேறி 8வது இடத்தைப் பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம்: அயர்லாந்து டி20க்கு அசுர டிமாண்ட்!

இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகும் முதல் டி20 போட்டிக்கு டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் அமைக்க அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?